‘கருப்பு’ வெற்றி: சூர்யா நெகிழ்ச்சிப் பகிர்வு

‘கருப்பு’ வெற்றி: சூர்யா நெகிழ்ச்சிப் பகிர்வு
Updated on
1 min read

‘கருப்பு’ படத்தின் வெற்றியால், நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கருப்பு’. ஒரு நாள் தாமதமாக வெளியானாலும், இப்படம் உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியினால் படக்குழுவினர் மட்டுமன்றி சூர்யாவும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். விரைவில் படக்குழுவினர் சார்பில் பிரம்மாண்டமான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதனிடையே ‘கருப்பு’ படத்தின் வெற்றி குறித்து சூர்யா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “உலகம் முழுவதிலும் இருந்து எங்களுக்கு கிடைத்து வரும் அன்பு, பெயர் மற்றும் புகழ் என அனைத்துமே ‘கருப்பு’ படத்துக்காக நம்பிக்கை வைத்து கடுமையாக உழைத்த ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரையே சாரும். இதற்கு துணையாக நின்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி.

எடிட்டர் கலைவண்ணன் படத்தின் படத்தொகுப்பு முடியும் வரை, எங்கள் படத்தின் மீது மட்டுமே முழுக்கவனமும் செலுத்தியதற்கு நன்றி. உங்கள் கைக்குழந்தையை கவனித்துக் கொண்டே எங்கள் படத்தின் பணிகளையும் மிக சிறப்பாக செய்தீர்கள். உங்கள் உழைப்பு பெரிதும் பாராட்டுக்குரியது.

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பணிக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. உங்களுக்கு கிடைத்து வரும் அன்பைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைக்கிறேன். திரையரங்குகளில் படம் இந்த அளவு உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் பெறுவதற்கு நீங்களே முதுகெலும்பாகத் திகழ்கிறீர்கள்.

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு படப்பிடிப்பின்போது என் மீது நீங்கள் பொழிந்த அளவற்ற அன்பிற்கு நன்றி. நீங்களும் உங்கள் குழுவினர்லும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்க, இரவும் பகலும் அயராது உழைத்தீர்கள். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மாபெரும் வெற்றிப் படம் அமைத்து தருவதாக உறுதியளித்தீர்கள். அந்த வெற்றியைப் பெற்று தந்த அதேவேளையில் அனைவரின் அன்பையும் சம்பாதித்து உள்ளீர்கள்.” என்று தெரிவித்துள்ளார் சூர்யா.

‘கருப்பு’ வெற்றி: சூர்யா நெகிழ்ச்சிப் பகிர்வு
‘கருப்பு’ வசூல் வேட்டை - படக்குழு மகிழ்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in