சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-வை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்! | IPL 2026

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-வை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்! | IPL 2026
Updated on
1 min read

சென்னை: ஐபிஎல் 2026 தொடரின் 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன் படிமுதலில் களம் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே சஞ்சு சாம்சன் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும், 18 வயதான இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களும், இறுதியில் ஷிவம் துபே 27 பந்துகளில் 45 ரன்களும் எடுக்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் வைஷாக் விஜய்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (39 ரன்கள்) மின்னல் வேகத் தொடக்கத்தை அளித்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் (43) மற்றும் கூப்பர் கோனோலி (36) ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நடுவரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் ஷஷாங்க் சிங் 14 ரன்கள் எடுத்து 8 பந்துகள் மீதமிருக்கையிலேயே அணியை வெற்றி பெறச் செய்தார்.

சென்னை அணிக்கு இது இந்த சீசனில் இரண்டாவது தோல்வியாகும். பந்துவீச்சில் சென்னை அணியின் அன்ஷுல் கம்போஜ் மற்றும் மேட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தபோதிலும், ரன்களைக் கட்டுப்படுத்தத் தவறியது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. சொந்த மைதானத்தில் தோல்வியைத் தழுவியது சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அடுத்த போட்டிகளில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே-வை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்! | IPL 2026
ஐபிஎல் போட்டியில் விளையாட நீதிமன்றத்தை நாடும் இலங்கையின் நுவான் துஷாரா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in