வதோதரா: இந்தியா - ஜிம்பாப்வே மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 39.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மோடெஸ்டர் முபிக்வா 37, கேப்டன் ஜோஸ்பின் நிகோமா 35 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான வைஷ்ணவி சர்மா 5 விக்கெட்களை வீழ்த்தினார். கிரந்தி கவுடு, சாயாலி சத்கரே ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 132 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
பிரதிகா ராவல் 56 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், ஷபாலி வர்மா 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் விளாசினர். இந்த வெற்றியின் வாயிலாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.