

சென்னை: உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
எஸ்டிஏடி உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி முதல்முறையாக பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 7-3, 2-7, 7-5, 7-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஹாங்காங்கின் காயிலீயை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 7-1, 7-4, 7-4 என்ற புள்ளிகள் கணக்கில் ஹாங்காங்கின் அலெக்ஸ் லாவையும், அனஹத் சிங் 7-2, 7-2, 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் ஹாங்காங்கின் டொமாட்டோ ஹோவையும் சாய்த்தனர்.