ஒரே ஓவரில் 13 பந்துகளை வீசி அதிர்ச்சி கொடுத்த அர்ஷ்தீப் சிங்

ஒரே ஓவரில் 13 பந்துகளை வீசி அதிர்ச்சி கொடுத்த அர்ஷ்தீப் சிங்
Updated on
2 min read

முலான்பூர்: இந்​தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 2-வது டி 20 கிரிக்​கெட் போட்டி முலான்​பூரில் உள்ள மகாராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நேற்று நடைபெற்​றது.

டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்​தார். இந்​திய அணி​யில் எந்​தவி மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்​லை. தென் ஆப்​பிரிக்க அணி​யில் 3 மாற்​றங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு இருந்​தது. டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், கேசவ் மஹா​ராஜ், அன்​ரிச் நோர்க்​கியா ஆகியோர் நீக்​கப்​பட்டு ரீஸா ஹென்ட்​ரிக்​ஸ், ஓட்​னீல் பார்ட்​மேன், ஜார்ஜ் லின்டே ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 20 ஓவர்​களில் 4 விக்கெட்​கள் இழப்​புக்கு 213 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக தொடக்க வீர​ரான குயிண்​டன் டி காக் 46 பந்​துகளில், 7 சிக்ஸர்கள், 5 பவுண்​டரி​களு​டன் 90 ரன்​கள் விளாசி​னார். அர்​ஷ்தீப் சிங் (3), அக்​சர் படேல் (2), ஜஸ்​பிரீத் பும்ரா (1), ஹர்​திக் பாண்​டியா (1) ஆகியோரது ஓவர்​களில் டி காக் சிக்​ஸர்​கள் பறக்​க​விட்​டார்.

ரீஸா ஹென்ட்​ரிக்ஸ் 8, கேப்​டன் எய்​டன் மார்க்​ரம் 29, டெவால்ட் பிரே​விஸ் 14 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். இறு​திக்​கட்ட ஓவர்​களில் டோனோவன் ஃபெரீரா 16 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்டரி​யுடன் 30 ரன்​களும், டேவிட் மில்​லர் 12 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 20 ரன்​களும் விளாசினர்.

இந்​திய அணி தரப்​பில் வருண் சக்​ர​வர்த்தி 4 ஓவர்​களை வீசி 29 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 2 விக்​கட்​களை வீழ்த்​தி​னார். அர்​ஷ்தீப் சிங் 4 ஓவர்​களை வீசி 54 ரன்​களை​யும், ஜஸ்​பிரீத் பும்ரா 4 ஓவர்​களை வீசி 45 ரன்​களை​யும் தாரை வார்த்​தனர். ஹர்​திக் பாண்​டியா 3 ஓவர்​களை வீசி விக்​கெட் ஏதும் கைப்​பற்​றாமல் 34 ரன்​களை வழங்​கி​னார். அக்​சர் படேல் 3 ஓவர்​களை வீசி 27 ரன்களை வழங்கி ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார்.

11-வது ஓவரை வீசிய அர்​ஷ்தீப் சிங் 7 வைடு​களு​டன் 13 பந்துகளை வீசி 18 ரன்​களை வாரி வழங்​கி​னார். இதன் மூலம் சர்வ​தேச டி 20 போட்​டி​யில் ஒரு ஓவரில் அதிக பந்​துகள் வீசிய ஆப்கானிஸ்​தானின் நவீன் உல் ஹக்​கின் மோச​மான சாதனையை அர்​ஷ்தீப் சிங் சமன் செய்​தார்.

நவீன் உல் ஹக் 2024-ம் ஆண்டு ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஒரே ஓவரில் 13 பந்​துகளை வீசி​யிருந்​தார்​.

214 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணியின் ஓபனிங் வீரர்கள் அபிஷேக் சர்மா 17 ரன்கள், ஷுப்மன் கில் 0 என தொடக்கத்திலேயே இந்திய தடுமாறியது. அக்சர் படேல் 21 ரன்களுடன் வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவ் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து இறங்கிய திலக் வர்மா அரை சதம் கடந்து 62 ரன்களுடன் அணியின் ஸ்கொரை உயர்த்தினார். கடந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வழங்கிய ஹர்திக் பாண்டியா இந்த முறை 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஜிதேஷ் சர்மா 27, ஷிவம் துபே 1, அர்ஷ்தீப் சிங் 4, வருண் சக்ரவர்த்தி 0, பும்ரா 0 என இந்திய அணி 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரே ஓவரில் 13 பந்துகளை வீசி அதிர்ச்சி கொடுத்த அர்ஷ்தீப் சிங்
ஷுப்மன் கில்லை முந்திய ஷேய் ஹோப்: 2025-ல் டாப் 5 பேட்டர்கள் யார் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in