

தைபே சிட்டி: தைபேசி சிட்டியில் நடைபெற்ற நியூ தைபே சிட்டி தடகள ஓபன் போட்டியின் ஆடவர் பிரிவு 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அனிமேஷ் குஜுர் 2-வதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சீன தைபேயிலுள்ள நியூ தைபே நகரில் இந்த தடகளப் போட்டி நேற்று நடைபெற்றது. 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் அனிமேஷ் குஜுர் 20.47 விநாடிகளில் ஓடிவந்து 2-வது இடம் பிடித்தார். இதேபிரிவில் தாய்லாந்து வீரர் புரிபோல் பூன்சன் 20.03 விநாடிகளில் ஓடி வந்து முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றார்.