இந்தியா - நியூஸி. டி20-ல் இன்று மோதல்: ஃபார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்

இந்தியா - நியூஸி. டி20-ல் இன்று மோதல்: ஃபார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்
Updated on
2 min read

நாக்பூர்: இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையி​லான முதல் டி 20 கிரிக்​கெட் போட்டி நாக்​பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது. நியூஸிலாந்து கிரிக்​கெட் இந்தியா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வருகிறது.

இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என கைப்​பற்றி வரலாற்று சாதனை படைத்​தது. இந்​நிலை​யில் இரு அணி​களும் 5 டி 20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் மோத உள்​ளன. இதன் முதல் ஆட்​டம் நாக்​பூரில் இன்று இரவு நடை​பெறுகிறது.

டி 20 உலகக் கோப்பை தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி தொடங்க உள்​ள​தால் தற்​போது நடை​பெற உள்ள நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான டி 20 தொடர் இந்​திய அணிக்கு சிறந்த பயிற்​சி​யாக அமையக்​கூடும். இந்​திய அணியை பொறுத்​தவரை​யில் கேப்​டன் சூர்​யகு​மார் யாத​வின் பேட்​டிங் ஃபார்ம் கவலை அளிக்​கும் வகை​யில் உள்ளது. அவர், கடந்த 2024-ம் ஆண்​டில் அணி​யின் கேப்​டன் பொறுப்பை ஏற்​றார். அவரது தலை​மை​யில் இந்​திய அணி 72 சதவீத வெற்​றிகளை குவித்​துள்​ளது.

ஆனால் தனிப்​பட்ட வகை​யில் சூர்​யகு​மார் யாத​வின் பேட்டிங் செயல் திறன் சிறப்​பான வகை​யில் இல்​லை. ஸ்டிரைக் ரேட், ஃபார்ம் ஆகிய​வற்றை கருத்​தில் கொண்டே டி 20 உலகக் கோப்பை தொடருக்​கான இந்​திய அணி​யில் ஷுப்​மன் கில்​லுக்கு வாய்ப்பு மறுக்​கப்​பட்​டது. இதனால் தற்​போது சூர்​யகு​மார் யாதவுக்கு கடும் நெருக்​கடி ஏற்​பட்​டுள்​ளது. நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான தொடரில் அவர், கணிச​மான அளவில் ரன்​கள் குவித்​தாக வேண்​டும்.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி 25 டி 20 ஆட்​டங்​களில் விளை​யாடி 18-ல் வெற்றி பெற்​றுள்​ளது. இந்த வெற்​றிகளில் அபிஷேக் சர்​மா​வின் அதிரடி தொடக்​கம், நடு ஓவர்​களில் வருண் சக்​ர​வர்த்​தி​யின் சுழல் முக்​கிய பங்கு வகித்​திருந்​தது. கடந்த ஆண்​டில் சூர்​யகு​மார் யாதவ் 19 ஆட்​டங்​களில் விளை​யாடி 218 ரன்​கள் மட்​டுமே சேர்த்​தார். ஒரு அரை சதம் கூட அடிக்​க​வில்​லை. அவரது ஸ்டிரைக் ரேட் 123 ஆக இருந்​தது. திலக் வர்​மாவை 3-வது வீர​ராககளமிறக்க செய்​து​விட்டு சூர்​யகு​மார் 4-வது இடத்தில் களமிறங்​கியதும் அவரது பேட்​டிங் வீழ்ச்​சிக்கு காரண​மாக அமைந்​தது.

மேலும் பல்​வேறு அணி​களின் பந்​து​வீச்​சாளர்​கள் சூர்யகுமார் யாதவை ஆட்​ட​மிழக்​கச் செய்​யும் தந்திரங்களை கற்​றுக்​கொண்​டு​விட்​டனர். கடின​மான லெந்த்​தில் நேராக வீசப்​படும் பந்​துகளால் சூர்​ய​ கு​மார் யாதவை கட்​டுப்​படுத்த முடி​யும் என்​ப​தை​யும் அவர்​கள் அறிந்​துள்​ளனர். இதில் இருந்து சூர்​ய​குமார் யாதவ் மீண்​டு​வரு​வதற்​கான வழிகளை கண்​டறிய வேண்​டும்.

திலக் வர்மா காயம் காரண​மாக விலகி உள்​ளதால் அவரது இடத்தில் இஷான் கிஷன் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்திலேயே தொடர்ந்து விளையாடக்கூடும். அவருக்கு அடுத்தப்படியாக பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கக்கூடும். டி 20 உலகக் கோப்பை தொடருக்​குள் திலக் வர்மா முழு உடற்​தகு​தியை பெறா​விட்​டால் அவரது இடத்தை ஸ்ரேயஸ் ஐயர் நிரப்​புவதற்​கான வாய்ப்​பு​கள் உள்​ளன. இதனால் கிடைக்கு வாய்ப்புகளை ஸ்ரேயஸ் ஐயர் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள முயற்சிக்ககூடும்.

ஒரு​நாள் போட்​டித் தொடரில் விளை​யா​டாத ஆல்​ர​வுண்​டர் ஹர்​திக் பாண்​டி​யா, வேகப்​பந்து வீச்​சாளர் ஜஸ்​பிரீத் பும்ரா, சுழற்​பந்து வீச்​சாளர் வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் அணிக்கு திரும்பி உள்​ளது பலம் சேர்க்​கக்​கூடும். நியூஸிலாந்து அணி 2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்​னர் 21 சர்​வ​தேச டி 20 போட்​டிகளில் விளை​யாடி 13-ல் வெற்றி கண்​டுள்​ளது. மிட்​செல் சாண்ட்னர் தலை​மையி​லான அந்த அணி வலு​வாக திகழ்கிறது. டெவன் கான்​வே, டேரில் மிட்​செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பேட்​டிங்​கில் நம்​பிக்கை அளிக்​கக்​கூடியர்​வகள். பந்​து​வீச்​சில் ஜேக்​கப் டஃபி இந்​திய பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.

கடந்த 2024-ம் ஆண்​டில் இந்​திய மண்​ணில் முதன்​முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த நியூஸிலாந்து அணி அதன் பின்​னர் கடந்த வாரம் ஒரு​நாள் போட்​டித் தொடரை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருந்​தது. இந்த வரிசை​யில் அந்த அணி டி 20 தொடரை​யும் கைப்​பற்​று​வ​தில் தீவிரம் காட்​டக்​கூடும்.

அணி​கள் விவரம்

இந்​தி​யா: சூர்​யகு​மார் யாதவ் (கேப்​டன்), அபிஷேக் சர்​மா, சஞ்சு சாம்​சன், இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர், ரிங்கு சிங், ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே, அக்​சர் படேல், குல்​தீப் யாதவ், வருண் சக்​ர​வர்த்​தி, ரவி பிஷ்னோய், ஜஸ்​பிரீத் பும்ரா, அர்​ஷ்தீப் சிங், ஹர்​ஷித் ராணா.

நியூஸிலாந்​து: மிட்​செல் சாண்ட்​னர் (கேப்​டன்), டெவன் கான்​வே, பெவன் ஜேக்​கப்​ஸ், டேரில் மிட்​செல், கிளென் பிலிப்​ஸ், டிம் ராபின்​சன், ஜிம்மி நீஷம், இஷ் சோதி, ஜாக் ஃபோக்​ஸ், மார்க் சாப்​மேன், மைக்​கேல் பிரேஸ்​வெல், ரச்சின் ரவீந்​தி​ரா, கைல் ஜேமிசன், மேட் ஹென்​றி, ஜேக்​கப்​ டஃபி, கிறிஸ்​டியன்​ கிளார்க்​.

நேரம்​: இரவு 7

நேரலை: ஸ்டார்​ ஸ்போர்​ட்​ஸ்​,

ஜியோ ஸ்டார் செயலி

இந்தியா - நியூஸி. டி20-ல் இன்று மோதல்: ஃபார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்
Single Salma: தன்னை அறியும் சல்மா உடைத்த ‘சமூகச் சடங்கு’ | திரை தேவதைகள் 01

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in