

டர்பன்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்களில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் டர்பன் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
வரும் ஜூன் மற்றும் ஜூலையில் இங்கிலாந்தில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய மகளிர் அணி, தற்போதைய தென் ஆப்பிரிக்க தொடரை பயன்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்தக்கூடும்.