

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 13-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நேற்று சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சுக்ஜீத் சிங் (12, 34-வது நிமிடங்கள்), ஹர்மன்பிரீத் சிங் (27, 31-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்களும், ஜுக்ராஜ் சிங் (47-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.
சீனா அணி தரப்பில் பெங் யங் (26-வது நிமிடம்), சோங்காங் சென் (36-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது.