

ஜோகன்னஸ்பர்க்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று முன்தினம் இரவு ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், ஷபாலி வர்மா 46 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 64 ரன்களும் விளாசினார். ஸ்மிருதி மந்தனா 35 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்தார்.
193 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 16.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் லாரா வோல்வார்ட் 53 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 115 ரன்களும், சுனே லஸ் 42 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 64 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது.
9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 3-0 என தன்வசப்படுத்தியது. அந்த அணி முதல் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டிருந்தது. 4-வது போட்டி நாளை (25-ம் தேதி) இதே மைதானத்தில் நடைபெறுகிறது.