

குமமோட்டோ: ஜப்பானின் குமமோட்டோ நகரில் ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோடை நரோகாவை எதிர்த்து விளையாடினார்.
இந்த மோதலில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான லக்ஷயா சென் 21-8, 21-14 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் டாங் டியான் யாவோவை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார்.