ஹாக்கியில் இந்தியா மீண்டும் தோல்வி

ஹாக்கியில் இந்தியா மீண்டும் தோல்வி
Updated on
1 min read

ஹோபர்ட்: சர்​வ​தேச ஹாக்கி கூட்​டமைப்பு சார்​பில் ஆடவருக்​கான ஹாக்கி புரோ லீக் தொடரின் ஒரு பகுதி தற்போது ஆஸ்​திரேலி​யா​வின் ஹோபர்ட நகரில் நடைபெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் இந்​திய அணி 0-2 என்ற கோல் கணக்​கில் ஸ்பெ​யினிடம் தோல்வி அடைந்​திருந்​தது.

இந்​நிலை​யில் இந்​திய அணி நேற்று ஆஸ்​திரேலி​யாவை எதிர்த்து விளை​யாடியது. இந்த ஆட்​டம் நிர்​ண​யிக்​கப்​பட்ட 60 நிமிடங்​களின் முடி​வில் 2-2 என்ற கோல் கணக்​கில் சமநிலை​யில் இருந்​தது. இந்​திய அணி தரப்​பில் அமித் ரோஹி​தாஸ் (15-வது நிமிடம்), ஜுக்​ராஜ் சிங் (43-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர்.

ஆஸ்​திரேலிய அணி சார்​பில் ஜோயல் ரின்​தலா 47 மற்​றும் 56-வது நிமிடங்​களில் கோல் அடித்து அசத்​தி​னார். இதையடுத்து வெற்​றியை தீர்​மானிக்க ஷுட் அவுட் நடத்​தப்​பட்​டது. இதில் ஆஸ்​திரேலிய அணி 5-4 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. இந்த ஆண்​டில் ஹாக்கி புரோ லீக்​கில் இந்​திய அணி தொடர்ச்​சி​யாக அடை​யும் 5-வது தோல்வி இது​வாகும்​.

ஹாக்கியில் இந்தியா மீண்டும் தோல்வி
நாடு முழுவதும் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in