தென் ஆப்பிரிக்காவுடன் 2-வது போட்டியில் இன்று மோதல்: ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

தென் ஆப்பிரிக்காவுடன் 2-வது போட்டியில் இன்று மோதல்: ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா
Updated on
2 min read

ராய்ப்பூர்: இந்​தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்​வ​தேச மைதானத்​தில் இன்று பிற்​பகல் 1.30 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெறும் பட்​சத்​தில் இந்​திய அணி ஒருநாள் போட்டி தொடரை கைப்​பற்​றும்.

இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் ராஞ்​சி​யில் நடை​பெற்ற முதல் ஆட்டத்​தில் இந்​திய அணி 17 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்த ஆட்​டத்​தில் சீனியர் பேட்​ஸ்​மே​னான விராட் கோலி 135 ரன்​களும், ரோஹித் சர்மா 57 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்றிக்கு முக்​கிய பங்​களிப்பு செய்​திருந்​தனர். இதே​போன்று பந்து ​வீச்​சில் தொடக்க ஓவர்​களில் ஹர்​ஷித் ராணா​வும், நடு ஓவர்களில் குல்​தீப் யாத​வும் சிறப்​பாக செயல்​பட்​டிருந்​தனர்.

2027-ம் ஆண்டு ஒரு​நாள் உலகக் கோப்​பைக்கு இரண்டு ஆண்​டு​கள் உள்ள நிலை​யில், கோலி​யும் ரோஹித்​தும் தங்​கள் உடற்​தகுதி மற்​றும் ஃபார்மை நிரூபிக்க ஒவ்​வொரு போட்​டி​யிலும் சிறப்​பாக செயல்பட வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளனர். இதனால் அவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். அதே வேளை​யில் அவர்​கள் இரு​வரை மட்​டுமே அணி நம்பியிருப்பதும் ஒரு வகை​யில் நெருக்கடி​யும் உரு​வாக்​கக்​கூடும்.

கடந்த ஆட்​டத்​தில் ருது​ராஜ் கெய்க்​வாட்​டுக்கு கொடுக்​கப்​பட்ட வாய்ப்பை அவர், சரி​யாக பயன்​படுத்​திக் கொள்​ளத் தவறி​னார். இதே​போன்று வாஷிங்​டன் சுந்​தரும் கவனம் ஈர்க்​கத் தவறி​னார். இவர்​கள் இருவரும் தங்​களது மந்​த​மான ஆட்​டத்​தால் இந்​திய அணி​யின் ரன்​ கு​விப்பு வேகத்​துக்கு நடு ஓவர்​களில் சற்று தடையை ஏற்​படுத்​தினர்.

மேலும் பொறுப்பு கேப்​டன் கே.எல்​.​ராகுல் தொடக்​கத்​தில் மந்​த​மாக விளை​யாடி​னாலும் கடைசி பவர்​பிளே​வில் சற்று விரை​வாக ரன்​கள் சேர்த்து பலம் சேர்த்​தார். கேப்​ட​னாக அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும்.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் தொடக்க வீரர்​கள் சிறப்​பாக செயல்​படும் ஹர்​ஷித் ராணா அதன் பின்​னர் ரன்​களை அதிக அளவில் விட்​டுக்​கொடுப்​பது பலவீன​மாக உள்​ளது. இதனால் அவர், ரன் குவிப்பை கட்​டுப்​படுத்​து​வ​தில் கவனம் செலுத்​தி​னால் அணி​யின் பலம் கூடு​தல் வலுப்​பெறும். சுழலில் குல்​தீப் யாதவ் 68 ரன்​களை வழங்​கிய போதி​லும் தேவை​யான நேரத்​தில் விக்​கெட்​களை வீழ்த்தி திருப்​பு​முனையை ஏற்​படுத்​திக் கொடுத்​தார். இதன் காரண​மாக தென் ஆப்​பிரிக்க அணியை கட்​டுப்​படுத்த முடிந்திருந்​தது.

தென் ஆப்​பிரிக்க அணியை பொறுத்​தவரை​யில் கடந்த ஆட்​டத்​தில் ஓய்வு கொடுக்​கப்​பட்​டிருந்த கேப்​டன் தெம்பா பவு​மா, கேசவ் மஹா​ராஜ் ஆகியோர் இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கக்​கூடும். ராஞ்சி போட்​டி​யில் 39 பந்​துகளில் 70 ரன்​கள் விளாசிய மார்கோ யான்​சன், 72 ரன்​கள் சேர்த்த மேத்யூ ப்ரீட்​ஸ்​கே, இறு​திக்​கட்ட ஓவர்களில் அதிரடி​யாக விளை​யாடி 67 ரன்​கள் விளாசிய கார்​பின் போஷ் ஆகியோர் இந்​திய பந்​து​ வீச்​சாளர்​களுக்கு மீண்​டும் ஒருமுறை அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.

ஆடுகளம் எப்படி?: 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறும் ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இதற்கு முன்னர் ஒரே ஒரு சர்வதேச நாள் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தது. அப்போது வேகப் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் நியூஸிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 109 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 30 ஓவர்களை மீதம் வைத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

தென் ஆப்பிரிக்காவுடன் 2-வது போட்டியில் இன்று மோதல்: ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா
என்னதான் இருக்கிறது ‘சஞ்சார் சாத்தி’ செயலியில்? - வலுக்கும் எதிர்ப்பும், மத்திய அரசின் விளக்கமும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in