ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிச்​சுற்​றில் இந்​திய அணி

ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிச்​சுற்​றில் இந்​திய அணி
Updated on: 
1 min read

மொஹாலி: ஆட​வர் ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்​கிப் போட்​டி​யின் இறுதிச் சுற்​றுக்கு 7-வது முறையாக இந்​திய அணி முன்​னேறியுள்​ளது.

பஞ்​சாப் மாநிலம் மொஹாலி​யில் நேற்று நடை​பெற்ற அரை இறுதிப் போட்​டி​யில் இந்​திய ஆட​வர் அணி சிறப்​பாக விளை​யாடி 8-1 என்ற கோல் கணக்​கில் தென்​கொரியா அணியை வீழ்த்​தி​யது.

அரை இறுதி​யில் இந்​திய வீரர்​கள் ஷைலானந்த் லக்ரா (4, 13-வது நிமிடம்), தில்​பிரீத் சிங் (21, 25-வது நிமிடம்) ஆகியோர் 2 கோல்​களும், கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங் (9-வது நிமிடம்), சுக்​ஜீத் சிங் (21-வது நிமிடம்), அங்​கத் பீர் சிங் (36-வது நிமிடம்), விவேக் சாகர் பிரசாத் (54-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர். தென் கொரிய அணிக்​காக 9-வது நிமிடத்​தில் சாங்​ஜுன் ஹான் ஒரு கோலடித்​தார்.

ஆசிய சாம்​பியன்ஸ் டிராபி ஹாக்கி: இறுதிச்​சுற்​றில் இந்​திய அணி
தீபாவளிக்காக ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள்: கூட்டுறவு அங்காடிகளில் இன்று முதல் விற்பனை

X