ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிப்பு

ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிப்பு
Updated on
1 min read

துபாய்: ஐசிசி டி20 தரவரிசை​யில் இந்​திய கிரிக்கெட் அணி நம்​பர் ஒன் இடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளது.

சர்​வ​தேச டி 20 அணி​கள் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளியிட்டுள்​ளது. இதில் 3 முறை சாம்​பிய​னான இந்​திய அணி முதலிடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளது. கடந்த மார்ச் மாதம் நடை​பெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்​திய அணி சாம்பியன் பட்​டம் வென்​றிருந்​தது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் சாம்​பியன் பட்​டத்தை தக்​க​வைத்​துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையை இந்​தியா படைத்திருந்தது.

அத்​துடன், மூன்​றாவது முறை​யாகக் கோப்​பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை​யும் இந்​தியா படைத்​தது. சமீபத்​திய டி20 அணி​களின் தரவரிசை​யானது, மே 2025 முதல் விளை​யாடப்​பட்ட அனைத்​துப் போட்​டிகளை​யும் 100 சதவீத​மாக​வும், அதற்கு முந்தைய இரண்டு ஆண்​டு​களில் விளை​யாடப்​பட்ட போட்​டிகளை 50 சதவீத​மாக​வும் கணக்​கிடப்​பட்​டுள்ளது.

இந்த வகை​யில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி 275 புள்ளிகளு​டன் முதலிடத்​தில் தொடர்​கிறது. இங்​கிலாந்து அணி 262 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தி​லும், ஆஸ்​திரேலியா 258 புள்ளிகளுடன் 3-வது இடத்​தி​லும் உள்​ளன. நியூஸிலாந்து (247), தென் ஆப்​பிரிக்கா (244), பாகிஸ்​தான் (240), மேற்கு இந்​தி​யத் தீவுகள் (233), வங்​கதேசம் (225), இலங்கை (221), ஆப்​கானிஸ்​தான் (220) ஆகிய அணி​கள் முறையே 4 முதல்​ 10-வது இடங்​களில்​ உள்ளன.

ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிப்பு
தவெகவின் ‘இன்ஸ்டன்ட்’ வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம் - பெரிய கட்சிகளை காவு வாங்கிய ‘அல்காரிதம்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in