ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி கால் இறுதி சுற்​றில் நாளை இந்தியா - பெல்​ஜி​யம் மோதல்

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி கால் இறுதி சுற்​றில் நாளை இந்தியா - பெல்​ஜி​யம் மோதல்
Updated on
1 min read

சென்னை: 14-வது ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற்று வருகிறது.

24 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள இந்​தத் தொடரில் லீக் சுற்று நிறைவடைந்​துள்ள நிலை​யில் ‘ஏ’ பிரி​வில் ஜெர்​மனி, ‘பி’ பிரி​வில் இந்​தி​யா, ‘சி’ பிரி​வில் அர்​ஜெண்​டி​னா, ‘டி’ பிரி​வில் ஸ்பெ​யின், ‘இ’ பிரி​வில் நெதர்​லாந்​து, ‘எஃப்’ பிரி​வில் பிரான்ஸ் ஆகிய அணி​கள் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறின.

இந்த 6 அணி​களு​டன் 2-வது இடம் பிடித்த 2 சிறந்த அணி​களாக நியூஸிலாந்​து, பெல்​ஜி​யம் ஆகிய​வை​யும் கால் இறுத சுற்​றில் கால்​ப​தித்​துள்​ளன. கால் இறுதி ஆட்​டங்​கள் நாளை (5-ம் தேதி) சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளை​யாட்​டரங்​கில் நடை​பெறுகின்றன. இதில் ரோஹித் தலைமையி​லான இந்​திய அணி பெல்​ஜி​யத்​துடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது.

அன்​றைய தினம் நடை​பெறும் மற்ற கால் இறுதி ஆட்​டங்​களில் ஸ்பெ​யின் - நியூஸிலாந்து அணி​களும் (பிற்​பகல் 12.30 மணி), ஜெர்மனி - பிரான்ஸ் (பிற்​பகல் 3 மணி) அணி​களும், அர்​ஜெண்​டினா - நெதர்​லாந்து அணி​களும் (மாலை 5.30 மணி) மோதுகின்றன.

இன்று (4-ம் தேதி) 9 முதல் 16 மற்​றும் 17 முதல் 24-வது இடங்​களுக்​கான ஆட்​டங்​கள் நடை​பெறுகின்​றன. இதில் மதுரை​யில் நடைபெறும் ஆட்​டங்​களில் நமீபியா - ஆஸ்​திரி​யா, வங்​கதேசம் - ஓமன், கொரியா - எகிப்​து, சீனா - கனடா ஆகிய அணி​கள் மோதுகின்​றன.

சென்​னை​யில் நடை​பெறும் ஆட்​டங்​களில் இங்​கிலாந்து - சிலி, தென் ஆப்​பிரிக்கா - மலேசி​யா, சுவிட்​சர்​லாந்து - அயர்​லாந்​து, ஆஸ்​திரேலியா - ஜப்​பான் ஆகிய அணி​கள் மோதுகின்​றன. மதுரை​யில் காலை 9 மணிக்​கும், சென்​னை​யில் பிற்​பகல் 12.30 மணிக்​கும்​ போட்​டிகள் தொடங்குகின்றன.

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி கால் இறுதி சுற்​றில் நாளை இந்தியா - பெல்​ஜி​யம் மோதல்
இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த தென் ஆப்​பிரிக்கா: 2-வது ஒருநாள் போட்டி ஹைலைட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in