மகளிர் ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ‘ஏ’

மகளிர் ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ‘ஏ’
Updated on
1 min read

பாங்காக்: மகளிருக்​கான ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் பாங்​காக்​கில் நடை​பெற்று வருகிறது. இதன் அரை இறுதி சுற்​றில் இந்தியா ‘ஏ’ - இலங்கை ‘ஏ’ அணி​கள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த இலங்கை ‘ஏ’ அணி 19.4 ஓவர்​களில் 118 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக சஞ்​ஜனா கவின்தி 31, ஷஷினி கிம்​ஹானி 22, சத்யா சந்​தீப்​பானி 15, ஹன்​சிமா கருணரத்னே 14 ரன்கள் சேர்த்​தனர். இந்​தியா ‘ஏ’ அணி தரப்​பில் இடது கை சுழற்​பந்து வீச்​சாள​ரான கேப்​டன் ராதா யாதவ் 3.4 ஓவர்​களை வீசி 19 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார்.

பிரேமா ராவத், தனுஜா கன்​வர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்​பற்​றினர். 119 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​தியா ‘ஏ’ அணி 13.3 ஓவர்​களில் 5 விக்கெட்களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. தினேஷ் விருந்தா 20 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​கள் விளாசி​னார்.

ராதா யாதவ் 18 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 31 ரன்களும், அனுஷ்கா சர்மா 27, நந்​தினி காஷ்யப் 13 ரன்களும் சேர்த்​தனர். 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​தியா ‘ஏ’ அணி இறு​திப் போட்​டிக்கு முனனேறியது. இறு​திப் போட்​டி​யில் இந்​தியா ‘ஏ’ அணி, வங்​கதேச ‘ஏ’ அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. வங்கதேச ‘ஏ’ அணி அரை இறுதி ஆட்​டத்​தில் பாகிஸ்​தான் ‘ஏ’ அணியை 54 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்​தது.

இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த வங்​கதேச ‘ஏ’ அணி 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 110 ரன்​கள் எடுத்​தது. அதிகபட்சமாக ஃபஹிமா கதுன் 40 ரன்​கள் எடுத்​தார். 111 ரன்​கள் இலக்​குடன்​ பேட்​ செய்​த ​பாகிஸ்​​தான்​ ‘ஏ’ அணி 16.4 ஓவர்​களில்​ 56 ரன்​களுக்​கு சுருண்​டது.

மகளிர் ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ‘ஏ’
அமைச்சர் நேரு மீது உடனே வழக்கு பதிவு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in