

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் தமிழ் ஹாக்கி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வருமானவரித்துறை - தெற்கு ரயில்வே அணிகள் மோதின.
இதில் வருமானவரித்துறை அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சிவமணி (26-வது நிமிடம்), மாரீஸ்வரன் (30-வது நிமிடம்), ஜீவாகுமார் (40-வது நிமிடம்), நவீன் ராஜ் (56-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
தெற்கு ரயில்வே அணி சார்பில் தினேஷ் குமார் (28-வது நிமிடம்), முரளி கிருஷ்ணன் (41-வது நிமிடம்), ஹர்ஜீத் சிங் (45-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் எஸ்எம் நகர் - எஸ்டிஏடி அணிகள் மோதின. இதில் எஸ்டிஏடி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சுந்தரஜித் (7-வது நிமிடம்), சுகுமார் (22-வது நிமிடம்), மணிகண்டன் (47-வது நிமிடம்), அரவிந்த் (55-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.