அதானி மீதான குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அதானி மீதான குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

நியூயார்க்: இந்​திய தொழில​திபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்​றும் இணை அதி​காரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்​கா​வில் தொடரப்​பட்​டிருந்த அனைத்து குற்​ற​வியல் வழக்​கு​களை​யும் தள்​ளு​படி செய்து நியூ​யார்க் ஃபெடரல் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் சூரிய மின்​சக்தி ஒப்​பந்​தங்​களைப் பெற சுமார் 265 மில்​லியன் டாலர் லஞ்​சம் கொடுத்​த​தாக​வும், இதுதொடர்​பான விவரங்​களை அமெரிக்க முதலீட்​டாளர்​களிடம் மறைத்​துப் பொய் பிரச்​சா​ரம் செய்து நிதி திரட்​டிய​தாக​வும் கூறி கடந்த 2024-ம் ஆண்டு நவம்​பரில் அதானி குழு​மத்​தின் மீது அமெரிக்க நீதித்துறை குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​தது.

நீண்​ட​கால​மாக நடை​பெற்ற இந்த வழக்​கில், அதானி மீதான நடவடிக்​கைகளைக் கைவிடு​வ​தாக அமெரிக்க நீதித்​துறை கடந்த மே மாதம் அறி​வித்​தது. இந்த வழக்​கின் பெரும்​பகுதி இந்​திய எல்லைக்​குட்​பட்​டது என்​றும், உள்​நாட்டு வழக்​கு​களில் கவனம் செலுத்​து​வதற்​காக இவ்வழக்கு் கைவிடப்​படு​வ​தாக​ அமெரிக்க நீதித்​துறை அதி​காரி ட்ரென்ட் மெக்​கோட்​டர் தெரி​வித்​தார்.

இதையடுத்து, மாவட்ட நீதிபதி நிக்​கோலஸ் கராஃபிஸ், அதானி மீதான குற்​ற​வியல் வழக்​கு​களை தள்​ளு​படி செய்து உத்தரவிட்டார்.

அதானி மீதான குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
கருக்கலைப்பு: சட்டம் சொல்வது என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in