உலக சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற வாய்ப்பு: விஸ்வநாதன் ஆனந்த் தகவல்

உலக சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற வாய்ப்பு: விஸ்வநாதன் ஆனந்த் தகவல்
Updated on
2 min read

ஜெய்ப்பூர்: கேண்​டிடேட்ஸ் செஸ் போட்​டி​யில் இந்​திய கிராண்ட்​மாஸ்ட்ர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்​றால் இந்த ஆண்டு உலக சாம்​பியன்​ஷிப் சென்​னை​யில் நடை​பெற வாய்ப்பு உள்​ளது என்று முன்​னாள் உலக சாம்​பியனும், சர்வ​தேச செஸ் சம்​மேளனத்​தின் (பிடே) துணைத் தலைவரு​மான ​விஸ்​வ​நாதன் ஆனந்த் தெரி​வித்​துள்​ளார்.

ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரில் நடை​பெற்று வரும் ஜெய்ப்​பூர் இலக்​கி​யத் திரு​விழா​வில் நேற்று விஸ்​வ​நாதன் ஆனந்த் கலந்​து​கொண்டு தனது புத்​தகத்தை அறி​முகம் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: கேண்​டிடேட்ஸ் செஸ் தொடர் வரும் மார்ச், ஏப்​ரலில் நடை​பெறவுள்​ளது. இந்​தப் போட்​டி​யில் பிரக்​ஞானந்​தா, பேபி​யானோ கருணா, ஹிகாரு நகமு​ரா, அனிஷ் கிரி, வெய் யீ, ஜவோகிர் சிந்தரோவ், ஆந்த்ரே எஸ்​பின்​கோ, மாத்​தி​யஸ் புளூ​பாம் ஆகியோர் விளை​யாட​வுள்​ளனர். இதில் சாம்​பியன் பட்​டம் வெல்​பவர், உலக சாம்​பியன் டி.கு​கேஷுடன், உலக சாம்பியன் பட்​டத்​துக்​காக மோது​வர்.

இந்​தப் போட்​டி​யில் யார் வெற்றி பெற்று சாம்​பியன் பட்டத்தைக் கைப்​பற்​றி​னாலும், அவர்​கள் நிச்​ச​யம் மிகப்​பெரிய வளர்ச்​சியை அடைவர். மேலும், உலக செஸ் போட்டி​யில் நடப்​புச் சாம்​பியனுக்கு சவால் அளிப்​பார்​கள். இந்​தப் போட்​டிக்கு ஆர். பிரக்​ஞானந்தா தகுதி பெற்​றால், அது உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் குகேஷ், பிரக்​ஞானந்தா இரு​வருக்​கும் உணர்ச்​சிகர​மான​தாக இருக்கும். கேண்​டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்​ஞானந்தா வெற்றி பெற்​றால், இந்த ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்​னை​யில் நடை​பெற வாய்ப்புள்​ளது.

உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் பிரக்​ஞானந்​தா, குகேஷ் ஆகியோர் மோதும்​போது அது ஒரு சாதா​ரண​மான போட்​டி​யாக இருக்​காது. அது சென்​னை​யில் கூட நடை​பெறலாம். இரு​வரும் ஒரே பள்​ளி​யில் படித்து ஒரே மாதிரியான சூழலில் இருக்​கின்​றனர். மேலும், அவர்களைச் சுற்​றி​யுள்ள அனை​வரின் எதிர்​வினை​யும் உணர்ச்​சிப்​பூர்​வ​மாக​வும், தீவிர​மாக​வும் இருக்​கும்.

அதே நேரத்​தில் குகேஷுடன் உலக போட்​டி​யில் மோதும் வீரர் வேறு நாட்​ட​வ​ராக இருந்​தால், அது அத்​தனை உணர்ச்சிகர​மாக இருக்​காது. நீண்ட நாட்​கள் கழித்து கொல்​கத்​தா​வில் நடைபெற்ற டாடா ஸ்டீல் பிளிட்ஸ் செஸ் போட்​டி​யில் விளை​யாடினேன். போட்​டி​யிடு​வது, சவாலான ஆட்​டங்​களில் பங்​கேற்​பது எனக்கு மிக​வும் பிடிக்​கும்.

எனக்​குத் தேவை​யான போட்​டிகளைத் தேர்வு செய்து விளை​யாடு​வேன். தற்​போதுள்ள இந்​திய வீரர், வீராங்கனை​களில் ஆர்​.வைஷாலி, அர்​ஜுன் எரி​கைசி, குகேஷ், பிரக்​ஞானந்தா ஆகியோரின் விளை​யாட்டு மிகவும் பிடிக்​கும். அவர்​கள் என்னை விட வயது குறைந்​தவர்​கள் என்​பது உண்​மை. அவர்​களு​டைய பெற்​றோரை விட எனக்கு வயது அதி​க​மாக இருக்​கலாம். நான் அவர்களுடன் உலக சாம்​பியன் என்ற ரீதி​யில் பேசவில்லை. நானும் செஸ் வீரன். அவர்​களும் செஸ் விளை​யாட்டு வீரர்​கள். நானும், அவர்​களும் சமம்​தான். இதில் சீனியர், ஜூனியர் என்ற வேறு​பாட்டை நான் பார்ப்பதில்​லை.

செஸ் விளை​யாட்​டின்​போது காய்​களை நகர்த்​து​வ​தில் நல்ல நகர்​வைத் தெரி​வித்​தால் அது ஒரு நல்ல நகர்​வு​தான். அங்கே சீனியர், ஜூனியர் கிடை​யாது. விளை​யாட்​டு​தான்​ முக்​கி​யம்​. இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​​தார்​. உலக செஸ்​ ​சாம்பியன்​ஷிப்​ போட்​டிக்​​கான தேதி, இடம்​ இது​வரை அறிவிக்கப்​பட​வில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

உலக சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற வாய்ப்பு: விஸ்வநாதன் ஆனந்த் தகவல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்: துள்ளிப் பாயும் காளைகள்... அடக்கி அசத்தும் வீரர்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in