“போட்டியை வெற்றியுடன் முடிக்கவே விரும்புகிறேன்” - திலக் வர்மா

“போட்டியை வெற்றியுடன் முடிக்கவே விரும்புகிறேன்” - திலக் வர்மா
Updated on: 
1 min read

பெங்களூரு: கிரிக்கெட் போட்டிகளை வெற்றியுடன் முடிக்கவே விரும்புகிறேன் என்று இந்திய அணியின் துணை கேப்டன் திலக் வர்மா தெரிவித்தார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நான் 3-வது வரிசையில் இறங்கி விளையாடி வந்தேன். தற்போது அந்த இடத்திலிருந்து 5 அல்லது 6-வது இடத்தில் இறங்கி விளையாடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இது சற்றே சவாலான விஷயம்தான். ஆனால், இதற்காக நான் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன்.

நாட்டுக்காக ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துக்கொடுப்பதையே விரும்புகிறேன் என்று நான் முன்பே கூறியிருக்கிறேன் தற்போது இஷான் கிஷன் 3-வது இடத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே,என்னைப் பொறுத்தவரை 5 அல்லது 6-வது இடத்தில் பேட்டிங் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த பொறுப்புக்கு நான் மனதளவில் தயாராகிவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“போட்டியை வெற்றியுடன் முடிக்கவே விரும்புகிறேன்” - திலக் வர்மா
“மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது” - அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in