நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை - கவாஸ்கருக்கு அஜீம் ரஃபீக் கண்டனம்

நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை - கவாஸ்கருக்கு அஜீம் ரஃபீக் கண்டனம்
Updated on
1 min read

தி ஹண்ட்ரட் 2026 தொடருக்கான ஏலத்தில் சன் ரைசர்ஸ் லீட்ஸ் பாகிஸ்தான் வீரரை ஏலம் எடுத்தது தொடர்பாக கவாஸ்கர் கடும் விமர்சனங்களைத் தொடுக்க அவர் மீது பாகிஸ்தான் வம்சாவளி இங்கிலாந்து வீரர் அஜீம் ரஃபீக் கடும் எதிர் விமர்சனங்களைத் தொடுத்துள்ளார்.

மிட் டே ஊடகத்தில் கவாஸ்கர் தான் எழுதிய பத்தியில் பாகிஸ்தான் புதிர் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை 1,90,000 பவுண்டுகளுக்கு சன் ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஏலம் எடுத்ததைக் கடுமையாகச் சாடியிருந்தார். சன்ரைசர்ஸ் அணி, சென்னையைச் சேர்ந்த சன் டிவி நெட்வொர்க்கிற்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவர்களுடையதுதான்.

கவாஸ்கர் அந்தப் பத்தியில் கூறியதாவது:

“'தி ஹன்ட்ரட்' தொடரில் ஒரு இந்திய ஃபிரான்சைஸிகள் பாகிஸ்தான் வீரர் ஒருவரை வாங்கியதால் ஏற்பட்ட சர்ச்சை ஆச்சரியப்படுவதற்கில்லை. 2008 நவம்பரில் நடந்த மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு, இந்திய ஃபிரான்சைஸ்கள் ஐபிஎல் போட்டிகளுக்காக பாகிஸ்தான் வீரர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து வருகின்றனர்.

ஒரு பாகிஸ்தானிய வீரருக்கு அவர்கள் வழங்கும் சம்பளம், அதன் மூலம் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கு வருமான வரியாகச் செலுத்தப்படுகிறது. இதுதான் அவர்கள் ஆயுதங்களை வாங்குவதற்கும் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் இறப்புகளுக்கும் மறைமுகமாகப் பங்களிக்கிறது என்ற புரிதல், பாகிஸ்தானிய கலைஞர்களையும் விளையாட்டு வீரர்களையும் பணியமர்த்துவது குறித்து பரிசீலிப்பதிலிருந்தே இந்திய நிறுவனங்களைத் பின்வாங்கச் செய்துள்ளது.

பணம் செலுத்துவது ஒரு இந்திய நிறுவனமாக இருந்தாலும் சரி, அல்லது அந்த நிறுவனத்தின் வெளிநாட்டுத் துணை நிறுவனமாக இருந்தாலும் சரி, அதன் உரிமையாளர் இந்தியராக இருந்தால், அவர் இந்திய உயிரிழப்புகளுக்கு மறைமுகமாகப் பங்களிக்கிறார்.” என்று கடுமையாகச் சாடியிருந்தார். கவாஸ்கரின் இந்தச் சாடலுக்கு இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடியவரும் பாகிஸ்தான் வம்சாவளி வீரரும் கராச்சியில் பிறந்தவருமான அஜீம் ரஃபீக் கவாஸ்கருக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்:

“கவாஸ்கரின் கருத்துக்கள் முற்றிலும் அபத்தமானவை. இத்தகையக் கருத்துக்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய கருத்துக்கள் இவை. நீங்கள் எத்தனை ரன்கள் எடுத்திருந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை கவாஸ்கர். கவாஸ்கரின் மிக மிக மோசமானச் செய்கை இது. இத்தகைய போட்டிகளில் நான் வர்ணனை செய்ய மாட்டேன் என்று கவாஸ்கர் புறக்கணிக்க வேண்டியதுதானே? செய்தாரா?”

இவ்வாறு சாடினார் அஜீம் ரஃபீக்.

நீங்கள் எவ்வளவு ரன்கள் அடித்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை - கவாஸ்கருக்கு அஜீம் ரஃபீக் கண்டனம்
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in