

ராஜ்கோட்: விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் அமன் ராவ் பெரேலா இரட்டைச் சதம் விளாசினார்.
ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் ஹைதராபாத், பெங்கால் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அமன் ராவ் பெரேலா 200 ரன்கள் (154 பந்துகள், 12 பவுண்டரி, 13 சிக்ஸர்) விளாசினார்.
பின்னர் விளையாடிய பெங்கால் அணி 44.4 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 107 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி கண்டது.