ரஞ்​சிக் கோப்​பையை வென்று ஜம்மு - ​காஷ்மீர் அணி வரலாறு படைத்தது எப்படி?

ரஞ்​சிக் கோப்​பையை வென்று ஜம்மு - ​காஷ்மீர் அணி வரலாறு படைத்தது எப்படி?
Updated on
2 min read

ஹுப்ளி: ரஞ்சி கிரிக்​கெட் கோப்​பையை வென்று ஜம்​மு-​காஷ்மீர் அணி வரலாற்​றுச் சாதனையைப் படைத்​துள்​ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் இறு​திப் போட்டி கர்​நாட​கா, ஜம்​மு-​காஷ்மீர் அணி​களுக்கு இடையே கர்​நாடக மாநிலம் ஹூப்​ளி​யில் நடை​பெற்​றது. கடந்த 24ம் தேதி தொடங்​கிய இந்த போட்​டி​யில் டாஸ் வென்ற ஜம்​மு-​காஷ்மீர் அணி முதலில் பேட்​டிங் செய்​தது. அந்த அணி​யின் ஷுபம் பண்​டிர் 121, யாவர் ஹசன் 88, பராஸ் டோக்ரா 70, அப்​துல் சமத் 61, கன்​ஹையா வாதவன் 70, சாஹில் லோத்ரா 72 ரன்​கள் குவித்​தனர். இதனால் முதல் இன்​னிங்​ஸில் ஜம்​மு-காஷ்மீர் அணி 584 ரன்​கள் குவித்​தது.

இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய கர்​நாடக அணி 293 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. மயங்க் அகர்​வால் அதி​கபட்​ச​மாக 160 ரன்​கள் சேர்த்​தார். ஜம்​மு-​காஷ்மீர் அணி​யின் ஆகிப் நபி 5 விக்கெட்​களைச் சாய்த்​தார். இதனால் முதல் இன்​னிங்​ஸில் 291 ரன்​கள் முன்​னிலை பெற்ற ஜம்​மு-​காஷ்மீர் 2-வது இன்​னிங்ஸை தொடங்​கியது.

2-வது இன்​னிங்​ஸிலும் ஜம்​மு-​காஷ்மீர் அணி வீரர்கள் அபார​மான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தினர். நேற்று முன்​தினம் நடை​பெற்ற 4-வது நாள் ஆட்ட முடி​வில் தொடக்க வீரர் இக்​பால் ஆட்டமிழக்காமல் 94 ரன்​கள் எடுத்து களத்​தில் இருந்​தார். இதனால், ஜம்​மு-​காஷ்மீர் அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 186 ரன்​கள் எடுத்​திருந்​தது. 477 ரன்​கள் முன்​னிலை பெற்​றிருந்த நிலை​யில், நேற்று நடை​பெற்ற கடைசி நாள் ஆட்​டத்தை ஜம்​மு-​காஷ்மீர் வீரர்கள் தொடர்ந்​தனர். இக்​பால் அபார​மாக விளை​யாடி சதம் விளாசி​னார். மற்​றொரு முனை​யில் சாஹில் லோத்​ரா​வும் சதமடித்​தார்.

4 விக்​கெட் இழப்​புக்கு 342 ரன்​கள் எடுத்​திருந்த நிலை​யில் ஜம்​மு-​காஷ்மீர் தனது 2-வது இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது. இக்​பால் 160 ரன்​களு​ட​னும், லோத்ரா 101 ரன்​களு​ட​னும் களத்​தில் இருந்தனர். மொத்​த​மாக 633 ரன்​கள் முன்​னிலை பெற்​றிருந்த நிலை​யில், 634 ரன்​கள் இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. ஆனால் இந்த ஸ்கோரை கர்​நாடக அணி​யால் எட்​டு​வது மிக​வும் கடினம். எனவே, போட்​டியை முடித்​துக் கொள்ள இரு அணி கேப்​டன்​களும் சம்​மதம் தெரி​வித்​தனர். இதையடுத்து போட்டி டிரா​வில் முடிந்​தது.

முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை அடிப்​படை​யில் ஜம்​மு-​காஷ்மீர் அணி வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்​டது. இதனால் ரஞ்சி கிரிக்​கெட் கோப்பை வரலாற்​றில் முதன்​முறை​யாக ஜம்​மு-​காஷ்மீர் அணி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்​றுச் சாதனையைப் பதிவு செய்​தது. ஷுபம் பண்​டிர் ஆட்​ட ​நாயகனாகத் தேர்வு செய்​யப்​பட்​டார். மேலும் தொடர்​நாயக​னாக ஆகிப் நபி தேர்​வா​னார். அவர் இந்​தத் தொடரில் 55 விக்கெட்களைச் சாய்த்​திருந்​தார்.

‘ஆகிப் நபி பெயர் பரிசீலிக்கப்படும்’: ரஞ்சி கோப்பை போட்டியில் அபாரமாக விளையாடி ஆகிப் நபியின் பெயரை தேர்வுக் குழுவினர் நிச்சயம் பரிசீலிப்பர் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் தேவஜித் சைக்கியா தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நேற்று நடைபெற்ற ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் தேவஜித் சைக்கியா கூறும்போது, “கடந்த 2 அல்லது 3 ஆண்டு காலமாக ஜம்மு-காஷ்மீர் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

இறுதிப் போட்டியில் ஆகிப் நபி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார். கால் இறுதி, அரை இறுதிப் போட்டிகளிலும் அவர் அபாரமாக செயல்பட்டார். இந்திய அணித் தேர்வுக் குழுவினர் இங்கும் வந்துள்ளனர். இந்திய அணித் தேர்வின் போது அவரது (ஆகிப் நபி) செயல்பாடு குறித்து நிச்சயம் அவர்கள் கவனத்தில் கொண்டு பரிசீலனை செய்வர்" என்றார்.

ரூ.2 கோடி பரிசு: முதல்​வர் அறி​விப்பு - ரஞ்சி கிரிக்​கெட் போட்டியில் கோப்​பையை வென்​றுள்ள ஜம்​மு-​ காஷ்மீர் அணிக்கு ரூ.2 கோடி பரிசு வழங்​கப்​படும் என்று ஜம்​மு-​ காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா தெரி​வித்​துள்​ளார். ரஞ்சி கிரிக்​கெட் வரலாற்​றில் முதன்​முறை​யாக ஜம்​மு-​ காஷ்மீர் அணி கோப்​பையை வென்று வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளது. இதையடுத்து ஜம்​மு-​காஷ்மீர் அணிக்கு முதல்​வர் அப்​துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஹூப்ளி மைதானத்​துக்கு நேரடி​யாக வந்த முதல்​வர் உமர், போட்டி​யின்​போது அணி வீரர்​களை உற்​சாகப்​படுத்​தி​னார். இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலை​தளத்​தில் அவர் கூறியதாவது: வரலாற்​றுச் சாதனை வெற்​றி​யால் ஜம்​மு-​ காஷ்மீர் பிராந்​தி​யம் முழு​வதும் உத்​வேகத்​தா​லும், பெரு​மை​யாலும் நிரம்பியுள்​ளது. அணி​யினருக்கு பரி​சாக ரூ.2 கோடி ரொக்​கம் வழங்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்.

ரஞ்​சிக் கோப்​பையை வென்று ஜம்மு - ​காஷ்மீர் அணி வரலாறு படைத்தது எப்படி?
ஆதரவற்ற விதவையர் வருமான உச்சவரம்பு ரூ.8,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in