சேப்​பாக்​கத்​தில் அதிரடியாக விளையாடியது எப்படி? - மனம் திறக்கும் சாய் சுதர்சன்

சேப்​பாக்​கத்​தில் அதிரடியாக விளையாடியது எப்படி? - மனம் திறக்கும் சாய் சுதர்சன்
Updated on
1 min read

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சேப்​பாக்​கம் மைதானத்​தில் குஜ​ராத் டைட்டன்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி ரன்​கள் சேர்க்க தடு​மாறியது. ஆனால் இதே ஆடு​களத்​தில் குஜ​ராத் அணியின் தொடக்க வீர​ரான சாய் சுதர்சன் எந்​த​வித நெருக்​கடி​யும் இல்​லாமல் அதிரடி​யாக விளை​யாடி 46 பந்துகளில், 7 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார்.

வெற்​றிக்கு பின்​னர் சாய் சுதர்​சன் கூறிய​தாவது: சொந்த மண்​ணில் விளை​யாடியது மிக​வும் மகிழ்ச்​சி​யாக உள்​ளது. கடந்த இன்​னிங்​ஸிலிருந்து கிடைத்த தன்னம்பிக்கையைப் பயன்​படுத்​தி, எவ்​வளவு சிறப்​பாக விளை​யாட முடி​யுமோ அவ்​வளவு சிறப்​பாக விளை​யாட நினைத்​தேன். நான் ரன்​கள் எடுக்​கிறேனா இல்​லையா என்​ப​தைப் பற்​றிப் பார்ப்​பது இல்​லை.

ஆட்​டம் எப்​படிச் செல்​கிறது என்​பதை மட்​டுமே கவனிக்கிறேன். இரண்​டாவது இன்​னிங்​ஸில் ஆடு​களம் பேட்​டிங் செய்​வதற்கு சற்று எளி​தாக இருந்​த​தாகவே உணர்ந்​தேன். இருப்​பினும் முதல் ஆறு ஓவர்​கள் விளையாடு​வதற்​குச் சற்று கடின​மாகத்​தான் இருந்​தது. ஆனால் முதல் ஆறு ஓவர்​களில் நாங்​கள் ஆடிய அசா​தா​ரண​மான அதிரடி ஆட்​டமே எங்​களை வலு​வான நிலை​யில் வைத்​திருக்க உதவியது.

பந்து பேட்​டிற்கு வரும்​போது, அதன் போக்​கிலேயே மிக​வும் நிதான​மாக விளை​யாட நினைக்​கிறேன். அது​தான் எனது இலக்​காக இருக்​கிறது. அதற்​காகவே கடின​மாக உழைக்கிறேன். ஆரம்​பத்​தில் சில இன்​னிங்​ஸ்​களில் என்னால் சரி​யான ரிதத்தை பிடிக்க முடிய​வில்​லை. ஆனால் இப்​போது அந்த ரிதம் கிடைத்​தவுடன், அனைத்தும் இயல்​பாக அமை​கிறது. இவ்​வாறு அவர் கூறினார்.

சேப்​பாக்​கத்​தில் அதிரடியாக விளையாடியது எப்படி? - மனம் திறக்கும் சாய் சுதர்சன்
சேப்பாக்கம் ஆடு​களம் மீது ருதுராஜ் கடும் அதிருப்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in