

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெற்று வந்த ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஹாங்காங்கிலுள்ள மாங் காக் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் மோதின.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் குவித்தது. பின்னர் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 5.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் விளாசி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
அந்த அணியின் கரீம் ஜனத் 13, குல்பதீன் நயீப் 17, பரமானுல்லா சஃபி 26, இம்ரான் மிர் 53(14 பந்துகள், 2 பவுண்டரி, 7 சிக்ஸர்) ரன்களை விளாசி அணியை வெற்றி பெறச் செய்தனர்.