உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய நடுவர்கள் ஒருவர் கூட இல்லை

28 ஆண்டுகளில் முதல் முறை
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய நடுவர்கள் ஒருவர் கூட இல்லை
Updated on
2 min read

புதுடெல்லி: ஆட​வருக்​கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் கடந்த 28 ஆண்​டு​களில் முதன்​முறை​யாக இந்​தி​யாவை சேர்ந்த நடு​வர்​கள், தொழில்​நுட்ப அதி​காரி​கள் இடம் பெற​வில்​லை. இதனால் முன்​னாள் அதி​காரி​கள் அதிருப்தி அடைந்​துள்​ளனர்.

சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனம் சார்​பில் ஆடவருக்​கான உலகக் கோப்பை ஹாக்​கித் தொடர் வரும் 15-ம் தேதி பெல்​ஜி​யம் மற்​றும் நெதர்​லாந்​தில் தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் இந்தியாவிலிருந்து ஒரு நடு​வரோ அல்​லது தொழில்​நுட்ப அதிகாரியோ இடம்​பெற​வில்​லை. 1998-ம் ஆண்டு உட்​ரெக்ட் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்​திய அதி​காரி​களின் பங்​களிப்பு இல்​லாமல் உலகக் கோப்பை ஹாக்​கித் தொடர் நடை​பெறு​வது இதுவே முதல்​முறை​யாகும். ஐரோப்​பிய நாடு​களைச் சேர்ந்தவர்களே நடு​வர் குழு​வில் அதி​கம் இடம் பெற்​றுள்​ளனர்.

இதற்கு முன்​னர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்​தியா சார்​பில் அமர்​ஜித் சிங் பாவா (1990), தர்​லோக் சிங் புல்​லர் (1994), சதீந்​தர் ஷர்மா (2002, 2006, 2010), ஆர்​.​வி. ரகு பிர​சாத் (2010, 2014, 2018, 2023) ஆகிய 4 பேர் நடு​வர்​களாகப் பணி​யாற்​றி​யுள்​ளனர்.

இதில் ரகு பிர​சாத் 200 சர்​வ​தேச போட்​டிகளில் நடு​வ​ராக பணி​யாற்றிய முதல் ஆசிய நடு​வர் என்ற பெரு​மையை பெற்​றார். அவர், கடந்து ஆண்டு ஓய்வு பெற்​றிருந்​தார். ரகு பிர​சாத் கூறும்​போது “முந்​தைய உலகக் கோப்​பை, ஒலிம்​பிக், புரோ லீக் மற்​றும் பிற சர்​வ​தேசப் போட்​டிகளில் வெளிப்​படுத்​தப்​படும் திறமையை மதிப்​பீடு செய்தே எஃப்​.ஐ.எச் நடு​வர் குழு பெரிய போட்​டிகளுக்​கான அதி​காரி​களைத் தேர்ந்​தெடுக்​கிறது. நிலை​யான திறமையே பிர​தான அளவு​கோலாக இருக்​கும்” என்​றார்.

பல ஒலிம்​பிக் மற்​றும் உலகக் கோப்​பைகளில் பணி​யாற்​றிய சதீந்​தர் ஷர்மா கூறும்​போது, “பா​வா, புல்​லர் ஆகியோ​ருக்கு பிறகு, நானும் ரகு​வும் அந்​தப் பாரம்​பரி​யத்​தைத் தொடர்ந்​தோம். ஐரோப்​பிய அதி​காரி​களுக்கு மத்​தி​யில் எங்​களை நிலைநிறுத்​து​வது எளி​தாக இருந்​த​தில்​லை. 2008-ம் ஆண்டு பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற ஒலிம்​பிக் போட்​டிக்கு இந்​திய ஆடவர் அணி தகுதி பெற​வில்லை என்​றாலும், நான் மட்​டுமே இந்​தி​யா​வின் பிர​தி​நி​தி​யாக அங்கு அதி​காரி​யாகப் பங்​கேற்​றேன்.

தொடர்ச்​சி​யான திறமைக்கு எந்த அளவுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுக்​கப்​படு​கிறது என்​பதை இது காட்​டு​கிறது. ஆனால், தற்​போது நாம் பின்​தங்​கி​விட்​டோம்” என்​றார்.

ஹாக்கி இந்​தியா அமைப்​பின் 2025-ம் ஆண்டு மே மாத நில​வரப்​படி, ஆடவர் நடு​வர் கட்​டமைப்​பில் நூற்​றுக்​கும் மேற்​பட்ட அதி​காரி​களும், மகளிர் கட்​டமைப்​பில் எழு​பதுக்​கும் மேற்​பட்ட அதி​காரி​களும் உள்​ளனர். இருப்​பினும், எஃப்​.ஐ.எச் நடு​வர் குழு​வில் வெறும் ஆறு இந்​திய ஆடவர்​களும், 4 மகளிர் மட்டுமே உள்​ளனர். ரகு பிர​சாத்​தின் ஓய்​வு, இந்த எண்​ணிக்​கையை மேலும் குறைத்​துள்​ளது. இதே​போன்று இந்​தி​யா​விடம் வெறும் 4 ஆண்​களும் இரண்டு பெண்​களுமே எஃப்​.ஐ.எச் தொழில்​நுட்ப அதி​காரி​களாக உள்​ளனர்.

சதீந்​தர் ஷர்மா தொடர்ந்து கூறும்​போது, “உள்​நாட்டு நடு​வர்​கள் பெரிய சர்​வ​தேசத் தொடர்​களில் பணி​யாற்​றா​விட்​டால், அவர்​கள் எப்​படி அனுபவத்​தைப் பெற முடி​யும்? உள்​நாட்டு நடு​வருக்​கும் சர்​வ​தேச நடு​வருக்​கும் மிகப்​பெரிய வித்​தி​யாசம் உள்​ளது. நவீன ஹாக்​கி​யின் தேவை​களைப் புரிந்​து​கொள்​ளும் வகை​யில் நடு​வர்​களும் தேசிய பயிற்சி முகாம்​களில் ஒரு பகு​தி​யாக இருக்க வேண்​டும். நம்​மிடம் திறமை உள்​ளது, ஆனால் அதி​காரி​களுக்​குச் சம்​மேளனத்​தின் ஆதர​வும் வாய்ப்​பு​களும் தேவை. அடுத்த உலகக் கோப்பை அல்​லது ஒலிம்​பிக்​கில் இந்​தியா பிர​தி​நி​தித்​து​வம் பெற விரும்​பி​னால்​, முறை​யான திட்​ட​மிடல்​ அவசியம்​” என்​றார்​.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய நடுவர்கள் ஒருவர் கூட இல்லை
பயிற்சி ஆட்டத்தில் இலங்கை பிரதமர் லெவன் 363 ரன்கள் குவிப்பு | SL vs IND

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in