Hockey WC: 2-வது சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி - பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை

Hockey WC: 2-வது சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி - பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை
Updated on
1 min read

ஆம்ஸ்டல்வீன்: உல​கக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்​லாந்​து, பெல்​ஜி​யம் நாட்​டில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் பிரி​வில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய அணி தனது முதல் லீக் ஆட்​டத்​தில் 3-1 என்ற கோல் கணக்​கில் வேல்ஸ் அணியை தோற்​கடித்​தது. அதேவேளை​யில் இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான 2-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி 2-4 என்ற கோல் கணக்​கில் தோல்வி அடைந்​தது.

இந்​நிலை​யில் இந்​திய அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் இன்று பாகிஸ்​தானுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் மாலை 6.30 மணிக்கு நெதர்​லாந்​தின் ஆம்​ஸ்​டல்​வீன் மைதானத்​தில் நடை​பெறுகிறது. 3 புள்​ளி​களு​டன் தனது பிரி​வில் 2-வது இடத்​தில் உள்ள இந்​திய அணி இன்​றைய ஆட்​டத்தை குறைந்​த​பட்​சம் டிரா செய்​தால் மட்​டுமே 2-வது சுற்​றுக்கு முன்​னேற முடி​யும் என்ற நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது.

அதேவேளை​யில் தனது முதல் ஆட்​டத்தை வேல்ஸ் அணிக்கு எதி​ராக 3-3 என டிரா செய்​திருந்த பாகிஸ்​தான் அணி அடுத்த ஆட்​டத்​தில் 1-4 என்ற கோல் கணக்​கில் இங்​கிலாந்​திடம் வீழ்ந்​திருந்​தது.

இதனால் ஒரு புள்​ளி​யுடன் 3-வது இடத்​தில் உள்ள பாகிஸ்​தான் அணி 2-வது சுற்​றுக்கு முன்​னேற வேண்​டு​மா​னால் இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது.

பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான போட்​டிகளில் இந்​திய அணி எப்​போதுமே ஆதிக்​கம் செலுத்தி வந்​துள்​ளது. இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் நடை​பெற்ற புரோ லீக் தொடரின் ஐரோப்​பியச் சுற்​றில் பாகிஸ்​தானை 7-1 மற்​றும் 4-3 என்ற கோல் கணக்​கில் இந்​திய அணி வீழ்த்​தி​யிருந்​தது. பாகிஸ்​தான் அணி கடைசி​யாக இந்​தி​யா​வுக்கு எதி​ராக 2016-ம் ஆண்டு நடை​பெற்ற சாம்​பியன்ஸ் டிராபி தொடரில்​தான் வெற்றி பெற்​றிருந்​தது.

கடந்த இரண்டு ஒலிம்​பிக் போட்​டிகளி​லும் இந்​தியா பதக்​கங்​களை வென்​றுள்​ளது. அதேவேளை​யில், நான்கு முறை உலகக்​கோப்பை சாம்​பிய​னான பாகிஸ்​தான் அணி கடந்த 2014 மற்​றும் 2023-ம் ஆகிய தொடர்​களுக்கு தகுதி பெறாத நிலை​யில் 8 ஆண்​டு​களுக்​குப் பிறகு தற்​போது​தான் உலகக் கோப்​பை​யில் விளை​யாடி வரு​கிறது.

கடைசி​யாக இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் உலகக் கோப்பை தொடரில் கடந்த 2010-ல் நேருக்​குநேர் மோதின. இதில் இந்​திய அணி 4-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி கண்​டிருந்​தது. 2018-ம் ஆண்டு தொடரில் இரு அணி​களும்​ நேருக்​கு நேர்​ மோத​வில்​லை.

Hockey WC: 2-வது சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி - பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை
2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலிய அணியில் ஜேக் வெதரால்டு நீக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in