

போபால்: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் போபாலில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா - சீனா அணிகள் நேற்று மோதின.
இதில் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தரப்பில் தீபிகா 2 கோல்களும் (38, 43-வது நிமிடங்கள்), இஷிகா (42-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.