வெலிங்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன.
முதல் டெஸ்ட் போட்டி வரும் 19-ம் வெலிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டாம் பிளண்டல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் உடற்தகுதியை பொறுத்தே அவர்கள் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்: டாம் லேதம் (கேப்டன்), டாம் பிளண்டல், டெவன் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் யங், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், ஜேக்கப் டஃபி, கைல் ஜேமிசன், ஹென்றி நிக்கோல்ஸ், நேதன் ஸ்மித், பிளேர் டிக்னர்.