

ராஜ்கோட்: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் விதர்பா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் பரோடா அணியை வீழ்த்தியது.
ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பரோடா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 293 ரன்களைக் குவித்தது. ஹர்திக் பாண்டியா 133 (92 பந்துகள், 8 பவுண்டரி, 11 சிக்ஸர்) ரன்கள் சேர்த்தார்.
பின்னர் விளையாடிய விதர்பா அணி 41.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதனால் அதிரடியாக விளையாடிய பாண்டியாவின் சதம் வீணானது.