

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படம் மூலம் இயக்குநரான ராஜமோகன், இப்போது இயக்கி வரும் படம், ‘ஃபாதர்’. பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணா நடிக்கும் இப்படத்துக்கு நகுல் அபயங்கர் இசை அமைக்கிறார். ஆர்சி ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.சந்துரு, யமுனா சந்திரசேகர் தயாரிக்கின்றனர்.
“ஓர் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அழகான உறவைப் பேசும் படமாக இது இருக்கும். மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது” என்றது படக்குழு. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.