சையது முஸ்​டாக் அலி டி20: தமிழக அணி வெற்றி

சையது முஸ்​டாக் அலி டி20: தமிழக அணி வெற்றி
Updated on: 
1 min read

இந்தூர்: சையது முஸ்​டாக் அலி டி20 தொடரில் தமிழக அணி தனது முதல் ஆட்​டத்​தில் நேற்று ரயில்வே அணி​யுடன் மோதி​யது.

இந்​தூரில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த தமிழக அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 172 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக ஷாருக் கான் 46, அமித் சாத்​விக் 38, பாலசுப்​ரமணி​யம் சச்​சின் 33, ராஜ்குமார் 31 ரன்​கள் சேர்த்​தனர்.

173 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ரயில்வே அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 166 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. அதி​கபட்​ச​மாக தவுஃபிக் உதின் 57, ஜுபைர் அலி 46 ரன்​கள் எடுத்​தனர்.

தமிழக அணி தரப்​பில் அதிசயராஜ் டேவிட்​சன் 3, வருண் சக்​ரவர்த்தி 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தமிழக அணி 4 புள்ளிளை பெற்றது.

சையது முஸ்​டாக் அலி டி20: தமிழக அணி வெற்றி
சோனியா காந்தி நூலில் இடம்பெற்றுள்ள குஜராத் கலவரத்துக்கு காரணமான ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய கருத்தால் சர்ச்சை

X