5-வது சுற்றில் குகேஷ் தோல்வி

5-வது சுற்றில் குகேஷ் தோல்வி

Published on

பிராக்: செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 5-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான நோடிர்பெக் அப்துசத்தோரோவுடன் மோதினார்.

தில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் வலுவான நிலையில் இருந்த நிலையில் 69-வது நகர்த்தலின் போது செய்த முக்கியமான தவறால் ஆட்டத்தில் தோல்வி அடைந்தார். இந்திய கிராண்ட் மாஸ்டரும் நடப்பு சாம்பியனான அரவிந்த் சிதம்பரமும் 5-வது சுற்றில் தோல்வியை சந்தித்தார்.

ஸ்பெயினின் அன்டன் குய்ஜாரோவை எதிர்த்து விளையாடிய அரவிந்த் சிதரம்பரம் 40-வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார். ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 5 சுற்றுகளின் முடிவில் குகேஷ் 1.5 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், அரவிந்த் சிதம்பரம் 1.5 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும் உள்ளனர். நெதர்லாந்தின் வான் ஃபாரஸ்ட் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

5-வது சுற்றில் குகேஷ் தோல்வி
நழுவுகிறதா கை... உதறுகிறதா உதய சூரியன்? - ஆளும் கூட்டணியை அசைக்கும் அதிரடி நகர்வுகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in