மகளிர் பிரிமீயர் லீக் டி 20: குஜராத் அணி வெற்றி

மகளிர் பிரிமீயர் லீக் டி 20: குஜராத் அணி வெற்றி
Updated on
1 min read

நவி மும்பை: மகளிர் பிரிமீயர் லீக் டி 20 தொடரில் நேற்று நவி​மும்​பை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் குஜ​ராத் ஜெயண்ட்ஸ் - யுபி வாரியர்ஸ் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த குஜ​ராத் அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 207 ரன்​கள் குவித்தது.

கேப்​டன் ஆஷ்லே கார்ட்​னர் 41 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 6 பவுண்டரி​களு​டன் 65 ரன்​களும், அனுஷ்கா சர்மா 30 பந்​துகளில், 7 பவுண்டரி​களு​டன் 44 ரன்​களும் விளாசினர். இறு​திக் கட்​டத்​தில் மட்டையை சுழற்​றிய ஜார்​ஜியா வார்​ஹாம் 10 பந்​துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்​டரி​யுடன் 27 ரன்​கள் சேர்த்​தார்.

208 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 197 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. அதி​கபட்​ச​மாக ஃபோப் லிட்ச் ஃபீல்ட் 40 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 78 ரன்​கள் விளாசி​னார்.

கேப்​டன் மெக் லேனிங் 30, ஸ்வேதா ஷேராவத் 25, ஆஷா சோபனா 27 ரன்​கள் சேர்த்​தனர். 10 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற குஜ​ராத் ஜெயண்ட்​ஸ் அணி 2 புள்​ளி​களை பெற்​றது.

மகளிர் பிரிமீயர் லீக் டி 20: குஜராத் அணி வெற்றி
புயல் வந்தாலும் போராட்டம் தொடரும்: ஊராட்சி செயலாளர்கள் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in