

இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா
செயின்ட் லூயிஸ்: கிராண்ட் செஸ் டூர் போட்டியின் அரை இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப்பில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமருக்கு எதிரான முதல் ஆட்டத்தை டிரா செய்திருந்தார். இந்நிலையில் வின்சென்ட் கீமருடன் நேற்று முன்தினம் மீண்டும் மோதினார் பிரக்ஞானந்தா. இதில் 55-வது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
இதன் மூலம் பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் உள்ளார். இதன் வாயிலாக கிராண்ட் செஸ் டூரின் நிறைவு போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை நெருங்கி உள்ளார் பிரக்ஞானந்தா.
கிளாசிக்கல் போட்டியை தொடர்ந்து பிரக்ஞானந்தாவும், வின்சென்ட் கீமரும் 2 ரேபிட் மற்றும் 4 பிளிட்ஸ் போட்டியிலும் மோத உள்ளனர்.