பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சபலென்கா அதிர்ச்சித் தோல்வி

டயானா ஷினைடர்

டயானா ஷினைடர்

Updated on
1 min read

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரும், பெலாரஸ் வீராங்கனையுமான அரினா சபலென்கா அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் அரினா சபலென்கா, ரஷ்யாவின் டயானா ஷினைடருடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய டயானா 3-6, 7-5, 6-0 என்ற செட் கணக்கில் அரினா சபலென்காவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சபலென்கா கால் இறுதியில் தோல்வி கண்டு அவரது ரசிகர்களை ஏமாற்றினார். மற்றொரு கால் இறுதியில் போலந்து வீராங்கனை மஜா சவலின்ஸ்கா 7-6, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டு வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவை வீழ்த்தினார்.

ஜாக்குப் மென்சிக் அபாரம்: ஆடவர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீரர் ஜாக்குப் மென்சிக் 6-4, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் பிரேசில் வீரர் ஜாவோ பொன்சேகாவை தோற்கடித்து அரை இறுதிக்குத் தகுதி பெற்றார்.

<div class="paragraphs"><p>டயானா ஷினைடர்</p></div>
உலகக் கோப்பை கால்பந்து: 43 வயதில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து வீரர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in