மெய்சிலிர்க்க வைத்த சுஜீத் கல்கல்: ஆசிய விளை​யாட்​டு போட்டி

சுஜீத் கல்​கல்

சுஜீத் கல்​கல்

Updated on: 
1 min read

ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் மல்​யுத்​தத்​தில் ஆடவருக்​கான 65 கிலோ எடைப்​பிரி​வில் தங்​கம் வென்று வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளார் இந்​தி​யா​வின் சுஜீத் கல்​கல். இறு​திப் போட்​டி​யில் அவர், தஜிகிஸ்​தான் வீரர் அப்​துல்​மஜித் குடியேவுக்கு எதி​ராக 2-9 என பின்​தங்​கிய நிலை​யி​லிருந்து மீண்டு வந்து தங்​கப் பதக்​கம் வென்​றது அனை​வரை​யும் மெய்​சிலிர்க்க வைத்​துள்​ளது.

ஈரான் மற்​றும் ஜப்​பான் நாடு​களின் பலம் வாய்ந்த மல்​யுத்த வீரர்​களை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறிய சுஜீத்​துக்​கு, தஜிகிஸ்​தான் வீரர் அப்​துல்​மஜித் குடியேவ் கடுமை​யான சவாலை அளித்​தார். போட்​டி​யின் தொடக்​கத்​தில் தனது அசாத்​திய வேகத்​தால் மிரட்​டிய குடியேவ் 9-2 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்று ஆதிக்​கம் செலுத்​தி​னார்.

முதல் பாதி​யில் சுஜீத்​தின் தாக்​குதல் யுக்​தி​களைத் தடுத்து கைப்​பூட்டு உத்​தி​களைக் கையாண்ட குடியேவ்​வுக்கு எதி​ராக, இரண்​டாம் பாதி​யில் தனது மின்​னல் வேகத்​தைக் கையில் எடுத்​தார் சுஜீத். எதி​ராளி​யின் பலத்தை அவரது வேகத்​தால் முறியடித்த அவர், அடுத்​தடுத்து புள்​ளி​களைக் குவித்து இடைவெளியை 8-9 எனக் குறைத்​தார்.

போட்டி முடிய வெறும் 20 விநாடிகள் மட்​டுமே இருந்த நிலை​யில், அவர் தொடுத்த அதிரடி​யான டேக்​-ட​வுன் மூவ் மூலம் வெற்​றிக்​கான புள்​ளியைப் பெற்​று, இறுதி வரை தனது ஒரு புள்​ளி​ முன்​னிலை​யைக் காப்​பாற்றி 10-9 என்ற கணக்​கில் சிலிர்ப்​பூட்​டும் வெற்​றியைப் பதிவு செய்​தார்.

இது சுஜீத்​தின் முதல் ஆசிய விளை​யாட்​டுத் தங்​க​மாகும். கடந்த 2023-ம் ஆண்டு ஹாங்​சோ​வில் நடை​பெற்ற ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிக்​கான தேர்​வின்​போது, முறைப்​படி தன்னை எதிர்த்​துப் போட்​டி​யிட அனு​ம​திக்​காமல் பஜ்ரங் பூனி​யா​வுக்கு நேரடி வாய்ப்பு வழங்​கப்​பட்​டதை எதிர்த்து சுஜீத் நீதி​மன்​றத்தை அணுகி இருந்​தார்.

ஆனால் இறு​தி​யில் பஜ்ரங் பூனி​யாவே ஹாங்சோ போட்​டிக்கு சென்​றார். சுஜீத்​துக்கு வாய்ப்பு கிடைக்​க​வில்​லை. எனினும் அந்த சோதனை​களைக் கடந்து தற்​போது தனது அசாத்​திய திறமை​யால் தங்​கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்​துள்​ளார். மேலும் கடந்த 12 மாதங்​களில் பங்​கேற்ற அனைத்து வகையி​லான சர்​வேதச போட்​டிகளி​லும் சாம்​பியன் பட்​டம் வென்​றுள்​ளார்​. இதன்​ மூலம் 2028 ஒலிம்​பிக்​ போட்​டிக்​​கான இந்​தி​யா​வின்​ மிகப்​பெரிய பதக்​க நம்​பிக்​கை​யாக சுஜீத்​ உரு​வெடுத்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>சுஜீத் கல்​கல்</p></div>
பிறந்த நாளில் தங்கம் வென்ற லவ்லினா: ஆசிய விளையாட்டு போட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in