ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: முதல் நிலை வீரரான அல்கராஸ், ஆஸி. வீரர் வால்டனுடன் மோதல்

கார்​லோஸ் அல்​க​ராஸ்

கார்​லோஸ் அல்​க​ராஸ்

Updated on
2 min read

மெல்பர்ன்: ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்​திரேலிய ஓபன் டென்​னிஸ் தொடர் ஆஸ்​திரேலி​யா​வில் உள்ள மெல்​பர்ன் நகரில் இன்று (18-ம் தேதி தொடங்​கு​கிறது. வரும் பிப்​ர​வரி 1-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் உலகில் உள்ள முன்​னணி வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொண்டு பட்​டம் வெல்ல மோதுகின்​றனர்.

போட்​டித் தரவரிசையில் ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸுக்கு முதலிடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. 2 முறை சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னருக்கு 2-வது இடமும் ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவுக்கு 3-வது இடமும், 10 முறை சாம்​பிய​னான செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச்​சுக்கு 4-வது இடமும் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

இத்​தாலி​யின் லோரென்சோ முசெட்​டி, ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மனார், கனடாவின் பெலிக்ஸ் ஆகர்​-அலி​யாசிம், அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன், டெய்​லர் ஃபிரிட்​ஸ், கஜகஸ்​தானின் அலெக்​சாண்​டர் பப்​ளிக் ஆகியோர் முறையே 5 முதல் 10-வது இடங்​களில் உள்​ளனர்.

மகளிர் ஒற்​றையர் பிரி​வில் பெலாரஸின் அரினா சபலென்​கா, போலந்​தின் இகா ஸ்வி​யாடெக், அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் ஆகியோ​ருக்கு முறையே முதல் 3 இடங்​கள் கொடுக்​கப்​பட்​டுள்​ளன. நடப்பு சாம்​பிய​னான அமெரிக்​கா​வின் மேடிசன் கீஸுக்கு 9-வது இடம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

தொடக்க நாளான இன்று ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் நடை​பெறும் முக்​கிய​மான ஆட்​டங்​களில் முதல் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், தரவரிசை​யில் 74-வது இடத்​தில் உள்ள ஆஸ்​திரேலி​யா​வின் ஆடம் வால்​ட​னுடன் மோதுகிறார். 22 வயதான அல்​க​ராஸ் பிரெஞ்சு ஓபன், விம்​பிள்​டன், யு.எஸ். ஓபன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் தொடர்​களில் தலா 2 முறை சாம்​பியன் பட்​டம் வென்​றுள்​ளார். ஆனால் இது​வரை அவர், ஆஸ்​திரேலிய ஓபன் பட்​டத்தை கைப்​பற்​ற​வில்​லை.

இதற்கு முன்​னர் 4 முறை அவர், ஆஸ்​திரேலிய ஓபனில் விளையாடி உள்​ளார். இதில் அதி​கபட்​ச​ மாக அவர், கடந்த 2024 மற்​றும் 2025-ம் ஆண்​டு​களில் கால் இறுதி சுற்று வரை முன்​னேறி​யிருந்​தார். 5-வது முறை​யாக ஆஸ்​திரேலிய ஓபனில் களமிறங்​கும் அல்​க​ராஸ் இம்​முறை கோப்​பையை வெல்​வதற்கு தீவிர முனைப்பு காட்​டக்​கூடும்.

அவருக்கு 2-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் கடும் சவால் அளி​கக்​கக்​கூடும். ஏனெனில் கடந்த 2 வருடங்​களாக பெரும்​பாலான கிராண்ட் ஸ்லாம் தொடர்​களின் இறு​திப் போட்​டி​யில் இவர்​களே நேருக்கு நேர் பலப்​பரீட்சை நடத்தி உள்​ளனர். நடப்பு சாம்​பிய​னான ஜன்​னிக் சின்​னர் தனது முதல் சுற்​றில் பிரான்​ஸின் ஹியூகோ காஸ்​ட​னுடன் நாளை மோதுகிறார். அதேவேளை​யில் 10 முறை சாம்​பிய​னான செர்​பி​யா​வின் நோக் ஜோகோ​விச், ஸ்பெ​யின் வீரர் பெட்ரோ மார்​டினெஸுடன் நாளை பலப்​பரீட்சை நடத்​துகிறார்.

இன்று நடை​பெறும் மற்ற ஆட்​டங்​களில் ஜெர்​மனி​யின் அலெக்​சாண்​டர் ஜிவேரேவ், கனடா​வின் கேப்​ரியல் டயல்​லோவுட​னும், 10-ம் நிலை வீர​ரான கஜகஸ்​தானின் அலெக்​சாண்​டர் பப்​ளிக், அமெரிக்​கா​வின் ஜென்​சன் ப்ரூக்​ஸ்​பி​யுட​னும், 29-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பிரான்​செஸ் தியா​போ, தகுதி நிலை வீர​ரான ஆஸ்​திரேலி​யா​வின் ஜேசன்​ குப்​லருட​னும், 26-ம் நிலை வீர​ரான இங்​கிலாந்​தின் கேமரூன் நோரி, பிரான்​ஸின் பெஞ்​ஜமின் போன்​ஸி​யுட​னும் மோதுகின்​றனர்.

மகளிர் ஒற்​றையர் பிரி​வில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலென்​கா, 20-ம் நிலை வீராங்​க​னை​யான பிரான்​ஸின் டியன்ட்​சோவா ரகோடோமங்கா ராஜாவோ​னா​வுடன் மோதுகிறார். 7-ம் நிலை வீராங்​க​னை​யான இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினி, தகுதி நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அலி​யாக்​சாண்ட்ரா சஸ்​னோ​விச்​சுட​னும், கிரீஸின் மரியா சக்​காரி, பிரான்​ஸின் லியோலியா ஜீன்​ஜீனுட​னும், இங்​கிலாந்​தின் எம்மா ரடு​கானு, தாய்​லாந்​தின் மனஞ்​சயா சவாங்​கேவுட​னும், 12-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் எலினா ஸ்விட்​டோலி​னா, ஸ்பெ​யினின் கிறிஸ்​டினா புக்​சாவுட​னும் மோதுகின்​றனர்.

45 வயதான அமெரிக்​கா​வின் வீனஸ் வில்​லி​யம்ஸ் தகுதி நிலை வீராங்​க​னை​யாக களமிறங்​கு​கிறார். இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் தொடரில் களமிறங்​கும் அதிக வயது வீராங்​கனை என்ற சாதனையை வீனஸ் வில்​லி​யம்​ஸ் படைக்க உள்​ளார்​. அவர், தனது முதல்​ சுற்​றில்​ இன்​று செர்​பி​யா​வின்​ ஒல்​கா டேனிலோ​விச்​சுடன்​ மோதுகிறார்​.

<div class="paragraphs"><p>கார்​லோஸ் அல்​க​ராஸ்</p></div>
நியூஸிலாந்துடன் கடைசி ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: தொடரை இழக்காமல் சாதனையை தக்க வைக்குமா இந்திய அணி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in