

ஹாரி கேன், லூகா மோட்ரிக், ஜோர்டான் அய்யூ, அனிபால் கோடோய்
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘எல்’ இங்கிலாந்து குரோஷியா, கானா, பனாமா ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து
பயிற்சியாளர்: தாமஸ் துச்செல், பிஃபா தரவரிசை: 4
சிறப்பான செயல் திறன்: 1966-ல் சாம்பியன்
கடைசி உலகக் கோப்பை: 2022
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 16
தகுதி பெற்ற விதம்: 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற முதல் ஐரோப்பிய நாடு இங்கிலாந்து ஆகும். இரண்டு போட்டிகள் மீதமிருந்த நிலையில், 2025 அக்டோபரில் இந்தச் சாதனையை அந்த அணி நிகழ்த்தியது.
செர்பியா, அல்பேனியா, லாட்வியா மற்றும் அன்டோரா ஆகிய நாடுகள் அடங்கிய குழுவில் எளிதாக வெற்றி பெற்றது. தொடக்க 6 போட்டிகளிலும் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் வெற்றி பெற்று, மிகக் குறுகிய காலத்தில் தங்கள் இடத்தை உறுதி செய்திருந்தது இங்கிலாந்து அணி.
நட்சத்திரங்கள்: ஜூட் பெல்லிங்ஹாம், ஹாரி கேன், டெக்லான் ரைஸ்
ஒட்டுமொத்த செயல் திறன்: 74 ஆட்டங்கள், 32 வெற்றி, 22 டிரா, 20 தோல்வி, 104 அடித்த கோல்கள், 68 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 17 vs குரோஷியா
ஜூன் 23 vs கானா
ஜூன் 27 vs பனாமா
குரோஷியா
பயிற்சியாளர்: ஸ்லாட்கோ டாலிச்,
பிஃபா தரவரிசை: 11
சிறப்பான செயல் திறன்: 2018-ம் ஆண்டு 2-வது இடம்.
கடைசி உலகக் கோப்பை: 2022
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 6
தகுதி பெற்ற விதம்: ஐரோப்பிய தகுதிச் சுற்றில் ‘எல்’ பிரிவில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், முதலிடத்தைப் பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது குரோஷியா அணி.
2025ம் ஆண்டு நவம்பர் 14 அன்று நடைபெற்ற ஃபாரோ தீவுகளுக்கு எதிரான போட்டியில், முதலில் பின்தங்கியிருந்த குரோஷியா, பின்னர் அதிரடியாக மீண்டெழுந்து 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பையில் கால் பதித்தது.
நட்சத்திரங்கள்: லூகா மோட்ரிக், ஜோஸ்கோ கார்டியோலா, மேடியோ கோவாசிச்
ஒட்டுமொத்த செயல் திறன்: 30 ஆட்டங்கள், 13 வெற்றி, 8 டிரா, 9 தோல்வி, 43 அடித்த கோல்கள், 33 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 17 vs இங்கிலாந்து
ஜூன் 23 vs பனாமா
ஜூன் 27 vs கானா
கானா
பயிற்சியாளர்: கார்லோஸ் குய்ரோஸ்
பிஃபா தரவரிசை: 73
சிறப்பான செயல் திறன்: 2010-ம் ஆண்டு தொடரில் கால் இறுதி வரை முன்னேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2022
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 4
தகுதி பெற்ற விதம்: ஆப்பிரிக்க தகுதிச் சுற்றின் ‘ஐ’ பிரிவில் கானா அணி 10 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று, 2 தோல்விகளுடன் முதலிடத்தைப் பிடித்தது.
தகுதிச் சுற்றின் இறுதி நாளில் கொமரோஸ் அணிக்கு எதிரான போட்டியில் முகமது குதுஸ் அடித்த வெற்றி கோல் மூலம், கானா உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதை உறுதி செய்தது. நட்சத்திர வீரரான ஜோர்டான் அய்யூ தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 7 கோல்களை அடித்து அசத்தினார்.
நட்சத்திரங்கள்: ஜோர்டான் அய்யூ, முகமது குதுஸ், தாமஸ் பார்ட்டி.
ஒட்டுமொத்த செயல் திறன்: 15 ஆட்டங்கள், 5 வெற்றி, 3 டிரா, 7 தோல்வி, 18 அடித்த கோல்கள், 23 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 17 vs பனாமா
ஜூன் 23 vs இங்கிலாந்து
ஜூன் 27 vs குரோஷியா
பனாமா
பயிற்சியாளர்: தாமஸ் கிறிஸ்டியன்சன்
பிஃபா தரவரிசை: 34
சிறப்பான செயல் திறன்: 2018-ம் ஆண்டு தொடரில் லீக் சுற்றுடன் வெளியேற்றம்.
கடைசி உலகக் கோப்பை: 2018
பங்கேற்ற உலகக் கோப்பை: 1
தகுதி பெற்ற விதம்: பனாமா அணி வட அமெரிக்க தகுதிச் சுற்றில் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்து உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. தகுதிச் சுற்றின் இறுதி நாளில் எல் சால்வடார் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்களது இடத்தை பனாமா உறுதி செய்தது.
இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் சுரினாம் அணியைப் பின்னுக்குத் தள்ளி, உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை பனாமா அணி தட்டிச் சென்றது.
நட்சத்திரங்கள்: அனிபால் கோடோய், ஜோஸ் கோர்டோபா, அமீர் முர்ரில்லோ.
ஒட்டுமொத்த செயல் திறன்: 3 ஆட்டங்கள், 0 வெற்றி, 0 டிரா, 3 தோல்வி, 2 அடித்த கோல்கள், 11 வாங்கிய கோல்கள்
மோதல்
ஜூன் 17 vs கானா
ஜூன் 23 vs குரோஷியா
ஜூன் 27 vs இங்கிலாந்து