கோல் வேட்டையில் மெஸ்ஸி | FIFA WC 2026

கோல் வேட்டையில் மெஸ்ஸி | FIFA WC 2026
Updated on
1 min read

டல்லாஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று முன்​தினம் இரவு அமெரிக்​கா​வில் டல்​லாஸ் நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்​கில் ஆஸ்​திரி​யாவை வீழ்த்​தி​யது. கேப்​ட​னும் நட்சத்திர வீரரு​மான லயோனல் மெஸ்ஸி 38 மற்​றும் 90+5-வது நிமிடங்​களில் அற்​புத​மாக கோல் அடித்து அசத்​தி​னார்.

இந்த வெற்​றி​யின் மூலம் அர்​ஜெண்​டினா அணி ‘ஜே’ பிரி​வில் 6 புள்ளி​களு​டன் நாக் அவுட் சுற்​றுக்கு முன்​னேறியது. ஆஸ்திரியாவுக்கு எதி​ரான போட்​டி​யில் லயோனல் மெஸ்ஸி அடித்த இரண்டு கோல்​களின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்​கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்​தார் 38 வயதாகும் மெஸ்​ஸி.

அவர், இது​வரை உலகக் கோப்பை வரலாற்​றில் 18 கோல்​களை அடித்​து, ஜெர்​மனி​யின் மிரோஸ்​லாவ் குளோஸின் (16 கோல்​கள்) சாதனையை முறியடித்​துள்​ளார். அத்​துடன் உலகக் கோப்பை வரலாற்​றில் தொடர்ந்து ஆறு போட்​டிகளில் கோல் அடித்த வீரார்களின் பட்​டியலில் பிரான்​சின் ஜஸ்ட் ஃபோன்​டைன் (1958) மற்​றும் பிரேசிலின் ஜெய்ர்​சின்ஹோ (1970) ஆகியோ​ருடன் தற்போது லயோனல் மெஸ்​ஸி​யும் இணைந்​துள்​ளார்.

முன்​ன​தாக, ஆட்​டத்​தின் 9-வது நிமிடத்​தில் அர்​ஜெண்​டி​னா​வுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி தவற​விட்​டார். இலக்கை நோக்கி மெஸ்ஸி அடித்த பந்து கோல் கம்​பத்​துக்கு இடது பக்​கம் வெளியே சென்று ஏமாற்​றம் அளித்​தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்​றில் அதிக பெனால்டி (4 முறை) வாய்ப்​பு​களைத் தவற​விட்ட வீரர் என்ற தேவையற்ற சாதனையை​யும் மெஸ்ஸியின் வசமானது.

கடந்த 3 உலகக் கோப்பை தொடர்​களில் அவர், இதை நிகழ்த்தி உள்​ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அர்​ஜெண்​டினா 2 ஆட்​டங்​களில் 5 கோல்​களை அடித்​துள்​ளது. இந்த கோல்​களை​யும் மெஸ்​ஸியே அடித்​துள்​ளார். அதீத பார்​மில் உள்ள அவரின், கோல் வேட்டை வரும்​ ஆட்​டங்​களில்​ தொடரக்கூடும்.

கோல் வேட்டையில் மெஸ்ஸி | FIFA WC 2026
மெஸ்ஸி, எம்பாப்பே சாதனை கோல்: நாக்-அவுட் சுற்றில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நார்வே| FIFA WC - Match Momentum

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in