24 ஆண்டுக்குப் பின் களம் கண்ட துருக்கியைச் சாய்த்த ஆஸ்திரேலியா | FIFA WC 2026

24 ஆண்டுக்குப் பின் களம் கண்ட துருக்கியைச் சாய்த்த ஆஸ்திரேலியா | FIFA WC 2026
Updated on
1 min read

வான்​கூவர்: உலகக் கோப்பை கால்பந்துப் போட்​டி​யின் குரூப் டி பிரிவு ஆட்​டத்​தில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்​கில் துருக்கி அணியை வீழ்த்​தி​யது.

இந்த ஆட்​டம் வான்​கூவர் மைதானத்​தில் நேற்று காலை 9.30 மணிக்கு நடை​பெற்​றது. 24 ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல்முறையாக துருக்கி அணி உலகக் கோப்​பை போட்டியில் களமிறங்​கியிருந்தது.

இரு அணி வீரர்​களும் ஆரம்​பம் முதலே உற்​சாகத்​துடன் விளையாடினர். துருக்கி அணி வீரர்​கள் பந்தை தங்​கள் வசம் அதிகம் வைத்​திருந்​த​போ​தி​லும் அவர்​களது கோலடிக்​கும் முயற்சியை ஆஸ்​திரேலிய வீரர்​கள் சிறப்​பான முறை​யில் தடுத்தனர்.

27-வது நிமிடத்​தில் ஆஸ்​திரேலிய வீரர் நெஸ்​டோரி இரங்​குன்டா சிறப்​பான கோலை அடித்​தார். இதனால் முதல் பாதி​யில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை வகித்​தது. 2-வது பாதி​யில் துருக்கி வீரர்​கள் தங்​களது ஆக்​ரோஷ​மான ஆட்டத்தை வெளிப்​படுத்​தினர்.

அவர்​களுக்கு ஈடு​கொடுக்​கும் வகை​யில் ஆஸ்​திரேலிய வீரர்​கள் செயல்​பட்டு அவர்​களது முயற்​சி​யைத் தடுத்​தனர். ஆட்​டத்​தின் 75-வது நிமிடத்​தில் ஆஸ்​திரேலிய வீரர் கானர் மெட்​கால்ஃப் அபாரமாக கோலை அடித்​தார்.

மஞ்​சள் அட்டை

போட்​டி​யின் 85-வது நிமிடத்​தின்​போது துருக்கி வீரர் யூனுஸ் அக்கனுக்கு மஞ்​சள் அட்டை வழங்​கப்​பட்​டது. முடி​வில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றது.இந்​தப் போட்​டி​யின்​போது துருக்கி அணி 72 சதவீத நேரம் பந்தை தம்​வசம் வைத்​திருந்த நிலை​யிலும் கோலடிக்க இயல​வில்​லை.

ஆனால் 28 சதவீத நேரம் மட்​டுமே பந்தை தம்​வசம் வைத்​திருந்த ஆஸ்​திரேலிய வீரர்​கள் சிறப்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்தி 2 கோல்​களை அடித்து வெற்றி கண்​டனர்.

துருக்கி அணி கடைசி​யாக 2002-ல் உலகக் கோப்​பை​யில் விளையாடி அரை இறுதி வரை முன்​னேறி​யிருந்​தது. அதன் பின்னர் தற்​போது​தான் உலகக் கோப்​பை​யில் பங்​கேற்​கிறது. ஆஸ்​திரேலிய அணி தொடர்ச்​சி​யாக 6-வது முறை உலகக் கோப்பை போட்​டி​யில் பங்​கேற்​றுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

24 ஆண்டுக்குப் பின் களம் கண்ட துருக்கியைச் சாய்த்த ஆஸ்திரேலியா | FIFA WC 2026
பிரேசிலுடன் டிரா செய்​தது மொராக்கோ | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in