அர்ஜெண்டினா அணி ஹாட்ரிக் வெற்​றி: ஜோர்​டானை 3-1 என்ற கணக்​கில் வீழ்த்​தி​யது | FIFA WC 2026

அர்ஜெண்டினா அணி ஹாட்ரிக் வெற்​றி: ஜோர்​டானை 3-1 என்ற கணக்​கில் வீழ்த்​தி​யது | FIFA WC 2026
Updated on
2 min read

ஆர்​லிங்​டன்: உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் ஜே பிரிவில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் அர்ஜெண்டினா ஹாட்​ரிக் வெற்​றியை பெற்​றது. இந்த ஆட்​டத்​தில் அர்ஜெண்டினா 3-1 என்ற கோல் கணக்​கில் ஜோர்டான் அணியை வென்​றது.

டல்​லாஸ் மாகாணம் ஆர்​லிங்​டனிலுள்ள ஏடி அன்ட் டி மைதானத்​தில் இந்த ஆட்​டம் நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்​கியது. இந்த ஆட்​டத்​தில் அர்ஜெண்டினா அணி​யில் பல மாற்​றங்​கள் செய்யப்​பட்​டன. ஏற்​கெனவே நாக்​-அவுட் சுற்​றுக்கு அர்ஜெண்டினா முன்​னேறி விட்​ட​தால், அணி​யில் 9 மாற்​றங்​களை பயிற்​சி​யாளர் செய்​திருந்​தார். நட்​சத்​திர வீரர் லயோனல் மெஸ்ஸி மாற்று ஆட்​டக்​கார​ராக களமிறக்​கப்​பட்​டார்.

ஆனாலும், அர்​ஜெண்​டினா அணி ஆரம்​பம் முதலே ஆக்ரோஷமாக விளை​யாடியது. ஆட்​டத்​தின் 19-வது நிமிடத்​தில் அர்ஜெண்டினா வீரர் கியோவனி லோ செல்ஸோ ஒரு கோலடித்து அணிக்கு முன்​னிலை பெற்று தந்​தார். பாக்ஸ் பகு​தி​யில் 20 அடி தூரத்​தில் இருந்து அவர் அடித்த ஃபிரீ கிக்​கை, ஜோர்​டான் கோல்​கீப்​பர் யாசித் அபுலைலா​வால் தடுக்க முடிய​வில்​லை. கோல்​கம்​பத்​தின் வலது பக்​கத்தை அந்த பந்து துளைத்​தது.

அர்ஜெண்டினா தொடர்ந்து பந்தை தங்​கள் கட்​டுப்​பாட்​டில் வைத்​திருந்​ததுடன், 31-வது நிமிடத்​தில் மேலும் ஒரு கோலை அடித்​தது. இந்த கோலை அர்​ஜெண்​டினா வீரர் லவுடேரா மார்ட்​டினஸ் செலுத்தி அணி வீரர்​களை உற்​சாகத்​துக்கு உள்​ளாக்​கி​னார். இதனால் முதல் பாதி வரை 2-0 என்ற கணக்​கில் அர்ஜெண்டினா முன்​னிலை​யில் இருந்​தது.

2-வது பாதி​யின்​போது ஆக்​ரோஷ​மாக விளை​யாடிய ஜோர்​டான் 55-வது நிமிடத்​தில் ஒரு கோலடித்​தது. அந்த அணி​யின் முசா அல்​-​தா​மாரி இந்த கோலை அடித்​தார்.

இந்​நிலை​யில் 60- வது நிமிடத்​தில் ரசிகர்​களின் ஏகோபித்த வரவேற்​புக்கு இடையே லயோனல் மெஸ்ஸி களமிறக்​கப்​பட்​டார். 80-வது நிமிடத்​தில் கிடைத்த ஃபிரீ கிக் மூலம் அற்​புத​மான கோலை அடித்து ரசிகர்​களை மகிழ்ச்​சிக்​குள்​ளாக்​கி​னார் மெஸ்​ஸி. இதனால் அர்​ஜெண்​டினா 3-1 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றது.

இறுதி வரை இந்​நிலை நீடிக்​கவே 3-1 என்ற கணக்​கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்​றது. லீக் சுற்​றில் ஹாட்​ரிக் வெற்றியை சுவைத்​ததுடன் இந்​தப் பிரி​வில் முதலிடம் பிடித்​தது அர்​ஜெண்​டி​னா. ஜே பிரி​வில் அர்​ஜெண்​டி​னா, ஆஸ்​திரி​யா, அல்ஜீரியா ஆகிய அணி​கள் நாக்​-அவுட் சுற்​றுக்கு முன்​னேறின. வெற்​றியே பெறாத ஜோர்​டன் சுற்​றி​லிருந்து வெளி​யேறியது.

தொடர்ந்து 7 போட்​டிகளில் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை

உலகக் கோப்பை போட்​டிகளில் தொடர்ந்து 7 ஆட்​டங்​களில் கோலடித்து சாதனை புரிந்​துள்​ளார் அர்​ஜெண்​டினா வீரர் லயோனல் மெஸ்​ஸி. நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஜோர்​டான் அணிக்​கெ​தி​ரான போட்​டி​யில் அவர் கோலடித்​ததன் மூலம் இந்த அபார​மான சாதனையை அவர் எட்​டி​னார்.

இதற்கு முன்பு பிரான்​ஸின் ஜஸ்ட் ஃபோன்​டைன் (1958), பிரேசிலின் ஜெய்ர்​சின்ஹோ (1970) ஆகியோர் தொடர்ந்து 6 உலகக் கோப்பை போட்​டிகளில் கோலடித்து சாதனை செய்திருந்தனர். அந்த சாதனையை தற்​போது மெஸ்ஸி முறியடித்துள்​ளார்.

மேலும் உலகக் கோப்பை வரலாற்​றில் அதிக கோல்​கள் அடித்த வீரர்​கள் வரிசை​யில் அவர் தொடர்ந்து முதலிடத்​தில் இருக்​கிறார். நேற்​றைய போட்​டி​யில் அடித்​த கோலுடன்​ எண்​ணிக்​கை 19-ஆக உயர்​ந்​துள்​ளது.

அர்ஜெண்டினா அணி ஹாட்ரிக் வெற்​றி: ஜோர்​டானை 3-1 என்ற கணக்​கில் வீழ்த்​தி​யது | FIFA WC 2026
‘ரவுண்ட் ஆப் 32’ சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் முழு விவரம் | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in