ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஜவோகிர், வெய் யீ முன்னேற்றம்

ஜவோகிர் | வெய் யீ

ஜவோகிர் | வெய் யீ

Updated on
1 min read

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாட உஸ்பெகிஸ்தானின் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர், சீனாவின் கிராண்ட்மாஸ்டர் வெய் யீ ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

கோவாவின் பனாஜியில் நேற்று நடைபெற்ற அரை இறுதிச் சுற்றில் ஜவோகிர், சகநாட்டு வீரரான நோடிர்பெக் யாகுப்போயவை வீழ்த்தி இறுதிச் சுற்றில் கால் பதித்தார். ஜவோகிர் தனது 47-வது நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார்.

மற்றொரு அரை இறுதிச் சுற்றில் சீனாவின் வெய் யீ, ரஷ்யாவின் கிராண்ட்மாஸ்டர் ஆன்ட்ரே எஸிபென்கோவை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 57 நகர்த்தல்களில் முடிவுக்கு வந்தது.

கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி: இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் உலக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு ஜவோகிர், வெய் யீ ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in