வைபவ் சூர்யவன்ஷிக்காக குவிந்த ரசிகர்கள்: ஆட்டமிழந்தவுடன் வெளியேறிய சுவாரஸ்யம்

இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி

இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி

Updated on
2 min read

துலீப் கோப்பை இறுதிப் போட்டி கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் கிழக்கு மண்டலம் இஷான் கிஷனின் அபார சதத்துடன் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது கிழக்கு மண்டலம் அணி.

ஆனால், விஷயம் அதுவல்ல சூப்பர் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி பேட் செய்யப்போகிறார் என்ற செய்தி எட்ட, ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர். காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்குவதற்குள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இலவசமாக திறந்துவிட்டிருந்த மூன்று அரங்கங்களும் நிரம்பி வழிந்தன.

பிறகு நுழைவாயில்களுக்கு வெளியே மக்கள் வரிசையில் காத்திருந்ததைத் தொடர்ந்து, மேலும் மூன்று அரங்குகள் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டன. சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் நிற உடை அணிந்திருந்த சிலர் உட்பட, சுமார் பத்தாயிரத்திற்கும் கூடுதலான பார்வையாளர்கள் அங்கு கூடி விட்டிருந்தனர்.

இவர்கள் வந்த காரணமே வைபவ் சூர்யவன்ஷிதான் என்றால் அது மிகையல்ல. எப்போதும் உள்நாட்டுக் கிரிக்கெட் என்றாலே ஸ்டாண்ட்கள் காலியாகவே இருப்பதைப் பார்த்திருக்கிறோம். சென்னையில் அதுவும் பயங்கர வெயிலில் நேற்று ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள் என்றால் அதற்கு வைபவ் சூர்யவன்ஷி உருவாக்கி வைத்துள்ள ‘Vibe’ தான் காரணம்.

உண்மையில் இந்த இறுதிப் போட்டி பெங்களூருவில் உள்ள செண்டர் ஆஃப் எக்செலன்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. பிற்பாடு சிற்சில காரணங்களால் சேப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.

சூர்யவன்ஷி ரசிகர்களை ஏமாற்றவில்லை. முகமது சிராஜை அவர் சந்தித்த 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸரை விளாசி ரசிகர்களை நாற்காலியிலிருந்து எழும்பச் செய்தார்.

தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மா, சூர்யவன்ஷி காற்றில் பறக்கவிட்டு தூள் கிளப்பும் இடத்திலெல்லாம் பீல்டர்களை நிறுத்தியிருந்தார். அதனாலும் கேரள வேகப்பந்து வீச்சாளர் நிதீஷ் நல்ல பவுன்ஸுடன் வீசியதும் சூர்யவன்ஷியை எச்சரிக்கையுடன் ஆடச் செய்தது.

முதலில் 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த சூர்யவன்ஷி, தெற்கு மண்டல வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அவருக்கு முயற்சி செய்து பிறகு ஃபுல் லெந்தில் செட்டில் ஆக, சூர்யவன்ஷி தன் ஷாட்களுக்குத் திரும்பினார். சிராஜை இருமுறை மிட் ஆஃப்புக்கு மேல் தூக்கினார். 24 பந்துகளில் 34 ரன்கள் என்று உயர்ந்தார்.

ஆனால், சூர்யவன்ஷியிடமிருந்து தீப்பொறி பேட்டிங்கை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம்தான், ஏனெனில் 37 பந்துகளில் 44 ரன்களை விளாசிய சூர்யவன்ஷி ஹைதராபாத்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சி.வி.மிலிந்தின் நெஞ்சு உயர ஷார்ட் பிட்ச் பவுன்சரை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேற சூர்யவன்ஷிக்காக கூடியிருந்த ரசிகர்கள் கப்சிப். சூர்யவன்ஷி ஆட்டமிழந்தவுடன் இருந்த ரசிகர்கள் கூட்டத்தின் ஒருபகுதியினர் வெளியேறத் தொடங்கினர்.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தொடங்கி, சேவாக், சச்சின், தோனி, யுவராஜ் சிங், ரெய்னா, கோலி உள்ளிட்டோர் ஈர்க்கும் ரசிகர்களை சூர்யவன்ஷி தன் 15 வயதிலேயே ஈர்க்கிறார் என்றால் அது பெரிய விஷயம். ஆனால், இதில் ஆபத்து என்னவெனில் அவருக்கு இதனால் பேட்டிங்கின் போது அழுத்தம் கூடுதலாக இருக்கும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ற இந்த அழுத்தத்தைச் சச்சின் டெண்டுல்கர் போல் சூர்யவன்ஷி வரும் காலங்களில் சிறப்பாக கையாள முடிந்தது என்றால் நிச்சயம் அடுத்த சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்குக் கிடைத்து விட்டார் என்றே பொருள்.

<div class="paragraphs"><p>இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி</p></div>
எஸ்ஐஆர் பணியில் இந்திய மக்கள் தொகையில் 15% பேர் நீக்கம்: முன்னாள் தேர்தல் ஆணையர் புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in