எஸ்ஐஆர் பணியில் இந்திய மக்கள் தொகையில் 15% பேர் நீக்கம்: முன்னாள் தேர்தல் ஆணையர் புகார்

எஸ்ஐஆர் பணியில் இந்திய மக்கள் தொகையில் 15% பேர் நீக்கம்: முன்னாள் தேர்தல் ஆணையர் புகார்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இருகட்டங்களாக 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி நிறைவு பெற்றிருக்கிறது.

3-ம் கட்டமாக 16 மாநிலங்கள் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி நடைபெற்று வருகிறது. எஸ்ஐஆர் குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தற்போதைய சூழலில் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 15% பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

இந்திய மக்கள் தொகை ஆணையத்தால் செய்ய முடியாத சாதனையை தேர்தல் ஆணையம் செய்து முடித்திருக்கிறது. சுமார் 15% மக்கள் தொகையை தேர்தல் ஆணையம் குறைத்திருக்கிறது. எஸ்ஐஆர் பணி முறை யாக நடைபெறவில்லை என்றே கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்ஐஆர் பணியில் இந்திய மக்கள் தொகையில் 15% பேர் நீக்கம்: முன்னாள் தேர்தல் ஆணையர் புகார்
சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க செய்யூர், கும்மிடிப்பூண்டி இடங்கள் தேர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in