டி20 தொடரை வென்றது இங்கிலாந்து

டி20 தொடரை வென்றது இங்கிலாந்து
Updated on
1 min read

கார்டிஃப்: இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு கார்டிஃப் நகரில் நடைபெற்றது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பதும் நிஷங்கா 37, கேப்ன் சரித் அசலங்கா 31, வனிந்து ஹசரங்கா 27, லகிரு உதரா 21 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் லியாம் டாவ்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜோப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

146 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 12.1 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. டாம் பேன்டன் 24 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். ஜாஸ் பட்லர் 30, கேப்டன் ஹாரி புரூக் 23, அனியூரின் டொனால்ட் 21 ரன்கள் சேர்த்தனர்.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

டி20 தொடரை வென்றது இங்கிலாந்து
அரை இறுதியில் இந்திய மகளிர் அணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in