பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி
Updated on
1 min read

பர்​மிங்​ஹாம்: பாகிஸ்​தானுக்கு எதி​ரான 3-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் இங்​கிலாந்து 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்றி பெற்​றது. இதையடுத்து டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்​கில் இங்​கிலாந்து அணி முழு​மை​யாகக் கைப்​பற்​றியது.

பாகிஸ்​தான் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் 2 போட்​டிகளில் இங்​கிலாந்து வெற்றி பெற்று 2-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது.

இந்​நிலை​யில் 3-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்​மிங்​ஹாமில் கடந்த 9-ம் தேதி தொடங்​கியது. முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் 133 ரன்​களும், இங்​கிலாந்து 453 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழந்​தன. இதையடுத்து 2-வது இன்​னிங்ஸை தொடங்​கிய பாகிஸ்​தான் 3-ம் நாளில் 449 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. இதைத் தொடர்ந்து 3-ம் நாள் ஆட்​டம் முடிவுக்கு வந்​தது.

இதையடுத்து 130 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் இங்​கிலாந்து அணி நேற்று 4-ம் நாள் ஆட்​டத்​தைத் தொடங்​கியது. தொடக்க ஆட்​டக்​காரர்​களான பென் டக்​கெட், எமிலியோ கே ஆகிய 2 பேரும் ரன் கணக்​கைத் தொடங்​காமலேயே ஆட்​ட​மிழந்​தனர்.

ஆனால், 3-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த ஜோர்​டன் காக்​ஸ், கேப்​டன் ஜோ ரூட் ஜோடி சிறப்​பாக விளை​யாடி அணியை வெற்றி பெறச் செய்தது. 24.2 ஓவர்​களில் இங்​கிலாந்து 2 விக்​கெட் இழப்​புக்கு 130 ரன்​கள் குவித்து வெற்றி கண்​டது.

காக்ஸ் 59 ரன்​களும், ஜோ ரூட் 62 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இதையடுத்து இங்​கிலாந்து அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்​றியைப் பெற்​றது. மேலும் 3 போட்​டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இங்​கிலாந்து 3-0 என்ற கணக்​கில் முழு​மை​யாகக் கைப்​பற்​றியது.

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி: அலெக்சாண்டர் ஜிவேரேவ் - பென் ஷெல்டன் மோதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in