

சிட்னி: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டியில் 14 ஆயிரம் ரன்களை விரைவில் எட்டவுள்ளார்.
சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஜோ ரூட் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் 13,849 ரன்களை குவித்துள்ளார். அவர் 14 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 151 ரன்கள் மட்டுமே தேவை.
இந்தப் போட்டியில் மேலும் ஓர் இன்னிங்ஸ் இருப்பதாலும், முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் இருப்பதாலும் இந்த போட்டியிலேயே அவர் 14 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ஜோ ரூட் 2-வது இடத்தில் இருக்கிறார். இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார்.
67-வது அரை சதம்: சச்சினை நெருங்கும் ஜோ ரூட் - இங்கிலாந்துக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் 5-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தனது 67-வது அரை சதத்தை விளாசினார். இதையடுத்து அரை சதம் விளாசியவர்கள் பட்டியலில் அவர் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நெருங்கியுள்ளார்.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் ஜோ ரூட் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இது ஜோ ரூட்டின் 67-வது அரை சதமாகும். இந்த வரிசையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 68 அரை சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
டெஸ்ட்டில் அதிக அரைசதங்கள் விளாசிய வர்கள் விவரம்: 1) சச்சின் டெண்டுல்கர் - 68 அரை சதம், 2) ஜோ ரூட் - 67 அரை சதம், 3) ஷிவ்நாராயண் சந்தர்பால் - 66 அரை சதம், 4) ராகுல் திராவிட் - 63 அரை சதம், 5) ஆலன் பார்டர் - 63 அரை சதம், 6) ரிக்கி பாண்டிங் - 62 அரை சதம்.