பட்லர், ப்ரூக் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்திலும் இந்தியா தோல்வி

பட்லர், ப்ரூக் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்திலும் இந்தியா தோல்வி
Updated on
1 min read

சவுத்தாம்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டி20 ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இங்கிலாந்தின் பட்லர் மற்றும் கேப்டன் ப்ரூக் ஆகியோர் தங்களது அதிரடி பேட்டிங் திறனை இதில் வெளிப்படுத்தி அசத்தினர்.

இந்த ஆட்டம் சவுத்​தாம்​டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. ஓட்​டலில் இருந்து மைதானத்​துக்கு புறப்​பட்ட இந்​திய அணி வீரர்​கள் பயணித்த பஸ், போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கிய​தால் போட்டி திட்​ட​மிட்​டபடி 7 மணிக்கு தொடங்​கப்​பட​வில்​லை. டாஸ் நிகழ்வு 7.15 மணிக்கு நடை​பெற்​றது. இதைத் தொடர்ந்து 7.30 மணிக்கு போட்டி தொடங்​கியது.

முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 20 ஓவர்​களில் 3 விக்​கெட்​டுகள் இழப்​புக்கு 257 ரன்​கள் குவித்​தது. தனது 2-வது சதத்தை விளாசிய ஜாஸ் பட்​லர் 64 பந்​துகளில், 8 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் 131 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஷிவம் துபே பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். கேப்​டன் ஹாரி ப்ரூக் 45 பந்​துகளில், 4 பவுண்​டரி​கள், 8 சிக்​ஸர்​களு​டன் 95 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

இந்த ஜோடி இந்​திய பந்​து​வீச்சை வெளுத்து வாங்கி 2-வது விக்​கெட்​டுக்கு 17 ஓவர்​களில் 233 ரன்​களை வேட்​டை​யாடியது. முன்​ன​தாக பில் சால்ட் 6 ரன்​களில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து 258 ரன்​கள் இலக்​குடன்​ பேட்​ செய்​த இந்​திய அணி ஆயத்​த​மானது.

இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். அபிஷக் 3 ரன்களில் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினார். சஞ்சு சாம்சன், 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து சாம் கரண் பந்தில் விக்கெட்டை இழந்தார்.

அதன் பின்னர் வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் உடன் இணைந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஷ்ரேயஸ், 28 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 10.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் சீரான இடைவெளியில் இந்தியா விக்கெட்டை இழந்தது.

இஷான் கிஷன் - 56, ஷிவம் துபே - 14, திலக் வர்மா - 53, சூர்யான்ஷ் ஷெட்கே - 7, அக்சர் படேல் - 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 56 ரன்களில் ஆட்டத்தை வென்றது. இந்த தொடரையும் 4-0 என்ற கணக்கில் வென்றது. ஆட்ட நாயகன் விருதை பட்லரும், தொடர் நாயகன் விருதை ஹாரி ப்ரூக்கும் பெற்றனர். முதல் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பட்லர், ப்ரூக் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்திலும் இந்தியா தோல்வி
ஆல்வரேஸ் ஸ்பெஷல் கோல்: காலிறுதியில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது அர்ஜெண்டினா | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in